“வடக்கின் கில்லாடி யார்?”: தொடரின் முதலாவது சுற்றின் இறுதிப் போட்டிகளின் முடிவுகள்

1382

Thepapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப் படும்வடக்கின் கில்லாடி யார்?உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாவது சுற்றின் கடைசி ஆட்டங்கள் நேற்றைய தினம் (21) அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றன.

“வடக்கின் கில்லாடி யார்?” ஐந்தாவது நாள் போட்டிகளின் முடிவுகள்

Thepapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை..

போட்டி இல. 15: இரணைமாதாநகர் சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் நாவற்குழி அன்னை விளையாட்டுக் கழகம்

யாழ் லீக்கின் FA கிண்ண சம்பியன்களான நாவற்குழி அன்னை விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து கிளிநொச்சி இரணைமாதாநகர் சென். மேரிஸ் அணி மோதியது.  

ஆட்ட நேரத்தின் போது கிடைத்த கோல் பெறும் வாய்ப்புக்களினை இரு அணியினரும் வீணடிக்க, கோல்களேதுமின்றி போட்டி நிறைவிற்குவந்தது.

முழு நேரம்: சென். மேரிஸ் 00 – 00 நாவற்குழி அன்னை

தொடர்ந்து இடம்பெற்ற சமநிலை தவிர்ப்பு உதையில் 04-03 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற சென். மேரிஸ் அணி இரண்டாவது சுற்றிற்கு தகுதிபெற்றது.

ஆட்டநாயகன்- டெனிசியஸ்


போட்டி இல.16: கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் எதிர் ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழகம்

இரு முன்னணி அணிகளுக்கிடையிலான மோதலாக விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாததாக அமைந்திருந்த, இந்த போட்டியில் ஹரிசன் பெற்றுக்கொடுத்த ஒரு கோலினது துணையுடன் வெற்றிபெற்ற கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் இறுதி அணியாக இரண்டாவது சுற்றிற்கு தகுதிபெற்றுள்ளது.

Photos: Vadakkin Killadi Yaar??? Football Tournament | Day 03 Matches

Photos: Vadakkin Killadi Yaar???..

முழு நேரம்: கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் 01-00 ஆனைக்கோட்டை யூனியன்  விளையாட்டுக் கழகம்

ஆட்டநாயகன் – கயந்

கோல் பெற்றவர்கள்

  • உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் – ஹரிசன்

வடக்கின் கில்லாடி தொடரில் முதலாவது சுற்று ஆட்டங்கள் நிறைவிற்கு வந்துள்ள நிலையில் நாளை முதல் (22.09.2018) இரண்டாவது சுற்று ஆட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெறவிருக்கின்றன.   


இரண்டாவது சுற்றிற்கு தகுதி பெற்றுள்ள அணிகள்.

யாழ்ப்பாணம் சென். மேரிஸ் வி., யாழ் பல்கலைக்கழகம், வேலணை ஐயனார் வி., நவிண்டில் கலைமதி வி., ஊரெளு றோயல் வி., முல்லைத்தீவு சுப்பர் றாங் வி., மெலிஞ்சிமுனை இருதயராசா வி., ஜோசப்வாஸ்நகர் ஐக்கிய வி., குஞ்சர்கடை கொலின்ஸ் வி., கிளிநொச்சி உதயதாரகை வி., அச்செழு வளர்மதி வி., குருநகர் பாடும்மீன் வி., இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் வி., கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் வி., இரணைமாதாநகர் சென் மேரிஸ் வி., உருத்திரபுரம் வி..  

Photos: Vadakkin Killadi Yaar??? Football Tournament | Day 02 Evening Matches

ThePapare.com | Murugaiah Saravanan | 17/09/2018 Editing..

இதன்படி, அதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து கொலின்ஸ் விளையாட்டுக் கழகமும்,  

3 மணிக்கு இடம்பெறவிருக்கும் இரண்டாவது போட்டியில் நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் அச்செளு வளர்மதி விளையாட்டுக் கழகமும் தொடர்ந்து இடம்பெறவிருக்கும் மூன்றாவது போட்டியில் இளவாலை யங் ஹென்றீயன்ஸ் விளையாட்டுக் கழகத்துடன் யாழ் பல்கலைக்கழக அணியும் போட்டியிடவுள்ளன.

வடக்கின் கில்லாடி யார்? தொடரில் போட்டி முடிவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் புகைப்படங்களிற்கு Thepapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.   

>> புகைப்படங்களைப் பார்வையிட <<