சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் உபுல் தரங்க

306

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உபுல் தரங்க, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கின்றார். 

இலங்கை வீரர்களுடன் நேரடியாக கலந்துரையாடிய முரளிரதன்!

உபுல் தரங்க தான் ஓய்வு பெறுவதனை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் (Facebook Page) வாயிலாக உறுதி செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

”எல்லா நல்ல விடயங்களுக்கும் ஒரு முடிவு இருக்கின்றது என பழமொழிகளில் கூறப்படுவதுண்டு. அந்தவகையில், 15 வருடங்கள் எனது சிறந்த ஆட்டத்தினை வழங்கிய பின்னர் எனது கிரிக்கெட் வாழ்க்கையினை முடித்துக் கொள்வதற்கான தருணம் இது எனக் கருதுகின்றேன்.” 

கடந்த 2005ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அறிமுகம் பெற்ற உபுல் தரங்க, ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியின் முன்னணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக கடந்த காலங்களில் காணப்பட்டிருந்தார். அதேநேரம், 235 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள உபுல் தரங்க 15 சதங்கள், 37 அரைச்சதங்கள் அடங்கலாக 6,951 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை கிரிக்கெட் அணியினுடைய தலைவராகவும் சிறிது காலம் பணிபுரிந்திருக்கும் உபுல் தரங்க 31 டெஸ்ட் போட்டிகளிலும், 26 T20 சர்வதேசப் போட்டிகளிலும் தனது தாயக அணியினை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றமை சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும். 

இறுதி தருணத்தில் பதவி விலகிய சமிந்த வாஸ்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றிருக்கும் உபுல் தரங்க, முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கெடுக்கவுள்ள லெஜன்ட்ஸ் T20 (Road Safey World Series) தொடரில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<