புதிய ஒப்பந்தத்தில் கைவிடப்பட்ட முன்னணி வீரர்கள்

330
PCB

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு தேசிய வீரர்களுக்கு வழங்கவுள்ள ஒப்பந்தத் தொகையை இன்று அறிவித்துள்ளது. இதில் கடந்த ஒப்பந்தத்தை விட இம்முறை  வீரர்களின் ஊதியத்தை 25 தொடக்கம் 30 சதவீதம் வரை உயர்த்த முடிவெடுத்துள்ளதுடன், போட்டிக்கான ஊதியத்தை 20 சதவீதத்தால் அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இந்தியர்

கடந்த வருடம் A,B,C மற்றும் D என்ற நான்கு பிரிவுகளாக வீரர்களுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை  பாகிஸ்தான் புதிதாக E என்ற பிரிவொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்ளூர் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வரும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த E பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 35 வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் இம்முறை 33 வீரர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் A பிரிவில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தி வருகின்ற பாபர் அசாம் B பிரிவிலிருந்து A பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வரும் முன்னணி சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸ் A பிரிவிலிருந்து B பிரிவுக்கு தரம் இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாபர் அசாமுடன் A பிரிவில், அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட், அசார் அலி, சொயிப் மலிக், யசீர் ஷா, மொஹமட் அமீர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதேவேளை, பாகிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர்களான பக்ஹர் ஷமான் மற்றும் சதாப் கான் ஆகியோர் C பிரிவில் இருந்து B பிரிவுக்கு முன்னேறியுள்ளதுடன், பஹீம் அஷ்ரப் D பிரிவிலிருந்து நேரடியாக B பிரிவுக்கு முன்னேறியுள்ளார். இவர்களுடன் பாகிஸ்தான் மட்டுப்படுத்தப்பட்ட அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடி வரும் இமாம் உல் ஹக் D பிரிவில் இருந்து C பிரிவில் இடம்பிடித்துள்ளார்.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் உலகின் முதலிடத்தில் கோஹ்லி

துடுப்பாட்ட வீரர்களுக்கான…

இவ்வாறு இளம் வீரர்கள் முன்னேற்றத்தைக் கண்டுள்ள நிலையில், முன்னணி வீரர்கள் சில தங்களது தரத்திலிருந்து கீழிறக்கப்பட்டுள்ளனர். இமாட் வசீம் B பிரிவிலிருந்து C பிரிவுக்கும், ரஹாட் அலி C பிரிவிலிருந்து D பிரிவுக்கும் தர இறக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அஹமட் சேஷார்ட்டின் பெயர் புதிய ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள வீரர்களின் விபரம்

A பிரிவு :  அசார் அலி, பாபர் அசாம், சொஹைப் மலிக், சர்ப்ராஸ் அஹமட், யசீர் ஷா, மொஹமட் அமீர்

B பிரிவு:  பக்ஹர் ஷமான், பஹீம் அஷ்ரப், சதாப் கான், அசாட் சபீக், மொஹமட் ஹபீஸ், ஹசன் அலி

C பிரிவு: வஹாப் ரியாஸ், சான் மசூட், ஹரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், மொஹமட் நவாஸ், உஸ்மான் சின்வாரி, இமாட் வசீம், ஜுனைட் கான், மொஹமட் அபாஸ்

D பிரிவு :  ரூமன் ரயீஸ், அசிப் அலி, உஸ்மான் சல்ஹாவூதீன், ஹுசைன் தலாத், ரஹாட் அலி

E பிரிவு :  பிலால் அசிப், சாட் அலி, மில் ஹம்ஷா, உமைட் அசிப், மொஹமட் ரிஸ்வான், சஹிப்ஷடா பர்ஹான், சஹீன் ஷா அப்ரிடி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க