Home Tamil தசுன் ஷானகவின் கன்னி சதம் வீண்! ; வெற்றியீட்டியது ஜிம்பாப்வே!

தசுன் ஷானகவின் கன்னி சதம் வீண்! ; வெற்றியீட்டியது ஜிம்பாப்வே!

Zimbabwe tour of Sri Lanka 2022

386

கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

ஐசிசி ஒருநாள் சுப்பர் லீக்கிற்கான இந்த போட்டித்தொடரின் இரண்டாவது போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

>> துனித்தின் சகலதுறை ஆட்டத்தால் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை

இலங்கை பதினொருவர்

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக, சாமிக்க கருணாரத்ன, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப், மஹீஷ் தீக்ஷன

ஜிம்பாப்வே பதினொருவர்

கிரைக் எர்வின் (தலைவர்),  பர்ல் ரயன், சகப்வா  ரெஜிஸ், டெண்டாய் சதாரா, கைடானோ டகுட்ஸ்வானாஷே, மெதெவர் வெஸ்லி, வெலிங்டன் மஷகட்ஷா, சிகண்டர்  ரஷா, சீன் வில்லியம்ஸ், என்கிரவா ரிச்சட், பிளெசிஸ் முஷரபாணி

டகுட்ஸ்வானாஷே கைடானோ மற்றும் ரெஜிஸ் சகப்வா ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 59 ஓட்டங்களை பகிர்ந்து, நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

சகப்வா 47 ஓட்டங்களை பெற்று அரைச்தத்தை  தவறவிட்டு ஆட்டமிழக்க, கைடானோ 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். குறித்த இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஜெப்ரி வெண்டர்சே இலங்கை அணிக்கு சாதகத்தை கொடுத்தார்.

இருப்பினும் முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்த ஷோன் வில்லியம்ஸ்  மற்றும் அணித்தலைவர் கிரைக் எர்வின் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்காக 106 ஓட்டங்களை பகிர்ந்து இலங்கை அணிக்கு சவால் கொடுத்தனர். இதில், ஷோன் வில்லியம்ஸ் அரைச்சதத்தை தவறவிட்டு 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கிரைக் எர்வின் அரைச்சதம் கடந்து வேகமாக ஓட்டங்களை குவித்தார்.

ஜிம்பாப்வே அணி 256 ஓட்டங்களை பெற்றிருந்த போது, கிரைக் எர்வின் 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து தன்னுடைய சதத்தை தவறவிட்டார். இறுதியாக, சிக்கண்டர் ரஷா வேகமாக ஓட்டங்களை குவித்ததுடன், தன்னுடைய அரைச்சதத்தையும் பதிவுசெய்தார். சிக்கண்டர் ரஷா இறுதி ஓவரின் இறுதிப்பந்தில் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஜெப்ரி வெண்டர்சே 3 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த போதும் தன்னுடைய 10 ஓவர்களில் 74 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, இந்த போட்டியின் ஆரம்பத்தில் தடுமாறத்தொடங்கியது. குசல் மெண்டிஸ் 7 ஓட்டங்கள், பெதும் நிஸ்ஸங்க 16 ஓட்டங்கள் மற்றும் தினேஷ் சந்திமால்  2 ஓட்டங்கள் என ஆட்டமிழக்க, இலங்கை அணி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

சவாலான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு, இந்த மூன்று விக்கெட்டுகள் நெருக்கடியை கொடுத்தன. எனினும், கமிந்து மெண்டிஸுடன் இணைந்து சரித் அசலங்க சிறிய இணைப்பாட்டமொன்றை பெற ஆரம்பித்தார். இவர் 23 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை வெஸ்லி மெதவேரின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க இலங்கை அணியின் 4வது விக்கெட் 63 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

எனினும், 5வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் தசுன் ஷானக ஆகியோர் அணிக்கு நம்பிக்கை தரக்கூடிய ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டனர். நிதானமாக ஓட்டங்களை குவிக்கத்தொடங்கிய இவர்கள் மத்தியவரிசையில் இலக்குக்கு ஏற்ற வகையில் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இதில், கமிந்து மெண்டிஸ் தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டி அரைச்சதத்தை பதிவுசெய்ய, தசுன் ஷானக மறுமுனையில் தன்னுடைய நான்காவது அரைச்சதத்தை பதிவுசெய்தார். இவர்கள் இருவரும் 5வது விக்கெட்டுக்காக 118 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது, கமிந்து மெண்டிஸ் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால், 181 ஓட்டங்களுக்கு தங்களுடைய 5வது விக்கெட்டை இலங்கை அணி இழந்தது.

குறித்த இந்த விக்கெட்டையடுத்து சாமிக்க கருணாரத்ன மற்றும் தசுன் ஷானக ஆகியோர் 66 ஓட்டங்களை பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையளித்ததுடன், தசுன் ஷானக தன்னுடைய கன்னி ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார்.  எனினும், இவர் சதமடித்த அடுத்த பந்தில் 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணியின் வெற்றிக்கனவு தகர்க்கப்பட்டது.

இவருக்கு அடுத்தப்படியாக சாமிக்க கருணாரத்ன ஓட்டங்களை பெறமுயற்சித்த போதும், அவரால் வேகமாக ஓட்டங்களை குவிக்க முடியாமல் 38 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 280 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் டெண்டாய் சடாரா மற்றும் பிளெஸிங் முஷரபாணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதேவேளை, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமனிலையாகியுள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<


Result


Zimbabwe
302/8 (50)

Sri Lanka
280/9 (50)

Batsmen R B 4s 6s SR
Takudzwanashe Kaitano b Jeffery Vandersay 26 28 2 1 92.86
Regis Chakabva st Kusal Mendis b Jeffery Vandersay 47 50 5 0 94.00
Craig Ervine b Maheesh Theekshana 91 98 10 0 92.86
Sean Williams st Kusal Mendis b Jeffery Vandersay 48 56 3 0 85.71
Wesly Madhevere b Chamika Karunaratne 1 7 0 0 14.29
Sikandar Raza c Dimuth Karunaratne b Praveen Jayawickrama 56 46 4 1 121.74
Ryan Burl run out (Chamika Gunasekara) 19 15 2 0 126.67
Wellington Masakadza c Nuwan Pradeep b Dushmantha Chameera 0 1 0 0 0.00
Blessing Muzarabani not out 0 1 0 0 0.00


Extras 14 (b 3 , lb 6 , nb 2, w 3, pen 0)
Total 302/8 (50 Overs, RR: 6.04)
Fall of Wickets 1-59 (9.5) Takudzwanashe Kaitano, 2-90 (15.4) Regis Chakabva, 3-196 (32.6) Sean Williams, 4-205 (35.3) Wesly Madhevere, 5-256 (43.5) Craig Ervine, 6-297 (48.6) Ryan Burl, 7-298 (49.2) Wellington Masakadza, 8-302 (49.6) Sikandar Raza,

Bowling O M R W Econ
Nuwan Pradeep 10 0 74 2 7.40
Dushmantha Chameera 9 0 47 0 5.22
Dasun Shanaka 2 0 14 0 7.00
Jeffery Vandersay 9 0 51 3 5.67
Maheesh Theekshana 10 0 49 1 4.90
Chamika Karunaratne 6 0 24 1 4.00
Kamindu Mendis 2 0 19 0 9.50
Charith Asalanka 2 0 15 0 7.50


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Regis Chakabva b Blessing Muzarabani 16 24 3 0 66.67
Kusal Mendis b Tendai Chatara 7 9 1 0 77.78
Kamindu Mendis c Craig Ervine b Richard Ngarava 57 82 4 0 69.51
Dinesh Chandimal c Sikandar Raza b Brian Mudzinganyama 2 6 0 0 33.33
Charith Asalanka b Wesly Madhevere 23 21 2 1 109.52
Dasun Shanaka c Sikandar Raza b Tendai Chatara 102 94 7 4 108.51
Chamika Karunaratne run out (Sean Williams) 34 38 0 0 89.47
Dushmantha Chameera c Wellington Masakadza b Tendai Chatara 13 12 0 0 108.33
Jeffery Vandersay c Regis Chakabva b Blessing Muzarabani 4 7 0 0 57.14
Maheesh Theekshana not out 4 4 0 0 100.00
Nuwan Pradeep not out 5 2 1 0 250.00


Extras 13 (b 0 , lb 5 , nb 1, w 7, pen 0)
Total 280/9 (50 Overs, RR: 5.6)
Fall of Wickets 1-20 (4.5) Kusal Mendis, 2-25 (5.5) Pathum Nissanka, 3-31 (7.5) Dinesh Chandimal, 4-63 (14.3) Charith Asalanka, 5-181 (34.3) Kamindu Mendis, 6-247 (44.4) Dasun Shanaka, 7-266 (47.1) Chamika Karunaratne, 8-268 (48.1) Dushmantha Chameera, 9-273 (49.2) Jeffery Vandersay,

Bowling O M R W Econ
Tendai Chatara 10 1 52 3 5.20
Blessing Muzarabani 10 0 56 3 5.60
Wesly Madhevere 4 0 30 1 7.50
Richard Ngarava 10 1 41 1 4.10
Wellington Masakadza 8 0 34 0 4.25
Sean Williams 6 0 48 0 8.00
Ryan Burl 2 0 14 0 7.00