சாமிக்க கருணாரத்னவை வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

1387
Chamika Karunaratne is SOLD to Kolkata Knight Riders

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருாணரத்ன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.

பெங்களூரில் நடைபெற்றுவரும் இந்த ஏலத்தில் வனிந்து ஹஸரங்கவை நேற்றைய தினம் 10.75 கோடிக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து இன்றைய தினத்தில் மஹீஷ் தீக்ஷன மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் வாங்கப்பட்டனர்.

>> மஹீஷ் தீக்ஷனவை வாங்கிய சென்னை ; லக்னோ அணியில் சமீர!

துஷ்மந்த சமீர 2 கோடி ரூபாவுக்கு லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணிக்காக வாங்கப்பட, மஹீஷ் தீக்ஷனவை 70 லட்சம் ரூபாவுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற ஏலத்தின் போது, சாமிக்க கருணாரத்னவை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவருக்கான நிர்ணயத்தொகையான 50 லட்சம் (இந்திய ரூபாய்) ரூபாய்க்கு வாங்கியது.

எவ்வாறாயினும் இந்த ஏலத்தின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களான பானுக ராஜபக்ஷ மற்றும் சரித் அசலங்க ஆகியோரை வாங்குவதற்கு எந்த அணிகளும் ஆர்வம் காட்டவில்லை.

தற்போதைய நிலையில், இலங்கை அணியைச்சேர்ந்த வனிந்து ஹஸரங்க, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<