இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஏற்பாட்டில் முன்னணி கிரிக்கெட் கழகங்களுக்கான 23 வயதின் கீழ்ப்பட்ட இருநாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் இம்மாதம் 05ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகுகின்றது.
>>இலங்கை அணிக்கு வீரர்களை தெரிவு செய்யும் SLC T20 லீக் தொடர்<<
மொத்தம் 26 கழக அணிகள் பங்கெடுக்கும் இந்த தொடரானது இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்களது திறமையினை வெளிப்படுத்த பெரும் வரப்பிரசமாக மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தொடரின் முதற்கட்டப் போட்டிகள் அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு செப்டம்பர் 09 வரை இடம்பெறவிருப்பதோடு, அதன் பின்னர் ஒவ்வொரு குழுவில் இருந்தும் இரண்டு அணிகள் தெரிவு செய்யப்பட்டு செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் காலிறுதிப் போட்டியும், செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் அரையிறுதிப் போட்டியும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
தொடரின் இறுதிப் போட்டி செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அணிகள் விபரம்
| குழு A | குழு B | குழு C | குழு D |
| ஏஸ் கெபிடல் | சோனகர் வி.க. | கோல்ட்ஸ் கி.க. | தமிழ் யூனியன் |
| BRC | சிலாபம் MCC | CCC | Kurunegala YCC |
| பதுரெலிய கி.க. | NCC | Panadura SC | Bloomfield C & AC |
| நுகேகொட வி.க. | Sebastianite C & AC | Ragama CC | பொலிஸ் வி.க. |
| மலே கி.க. | கடற்படை வி.க. | Negombo CC | SSC |
| United Southern SC | மொரட்டுவ வி.க. | Leo CC | Kandy Custom SC |
| இராணுவப்படை வி.க. | காலி கி.க. |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<





















