அணித் தலைவர் கமில் மிஷாரவின் அபார துடுப்பாட்டத்தின் உதவியோடு 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான சுப்பர் ப்ரொவின்ஷியல் கிரிக்கெட் தொடரில் கண்டி அணிக்கு எதிரான மோதலில் கொழும்பு அணி 95 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச அரங்கில் இன்று (18) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த கொழும்பு 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு ஆரம்ப வீரராக வந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் கமில் மிஷார சிறப்பாக ஆடினார்.
மாகாண மட்ட ஆரம்ப போட்டிகளில் கொழும்பு, கண்டிக்கு வெற்றி
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 19 வயதுக்கு உட்….
மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக சரிந்தபோதும் மிஷார சிறப்பாக ஆடி சதம் கடந்ததோடு 6ஆவது விக்கெட் வீழும் வரை களத்தில் இருந்து 161 பந்துகளில் 15 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 152 ஓட்டங்களை குவித்தார்.
எனினும், வேறு எந்த வீரரும் அரைச் சதம் கூட எட்டவில்லை. அஹன் விக்ரமகே 32 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்றார். சிறப்பாக பந்துவீசிய திஸ்ஸ மத்திய மஹா வித்தியாலயத்தின் சுழற் பந்துவீச்சாளர் ரொஹான் சஞ்சய 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய கண்டி அணி 42 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் நெருக்கடியை சந்தித்தது. மத்திய வரிசையில் கிஹான் ரத்னாயக்க சிறப்பாக ஆடி 49 ஓட்டங்களை பெற்றபோதும் அந்த அணியால் மீள முடியவில்லை.
இறுதியில் கண்டி அணி 38.2 ஓவர்களில் 174 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான சமிந்து விஜேசிங்க மற்றும் பிரவீன் நிமேஷ் இருவரும் கொழும்பு அணி சார்பில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Photos : Colombo Vs Kandy | SLC U19 Super Provincial Tournament 2019
கொழும்பு அணி இந்த தொடரின் முதல் போட்டியில் தம்புள்ளை அணியை இலகுவாக வென்ற நிலையில் இன்றைய போட்டியில் பதிவு செய்த இரண்டாவது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதனிடையே பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த காலி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட விளையாடப்படாத நிலையில் நாளைய (19) தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நாளை தம்புள்ளை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Johanne De Zilva | c Ravindu Rathnayakke b Ruvin Peiris | 8 | 17 | 2 | 0 | 47.06 |
Kamil Mishara | c Kavindu Nadeeshan b Rohan Sanjaya | 152 | 161 | 15 | 3 | 94.41 |
Mohammed Shamaz | c Chamod Sandaru b Rohan Sanjaya | 9 | 19 | 1 | 0 | 47.37 |
Ahan Wicrkamasinghe | b Kavindu Nadeeshan | 30 | 32 | 3 | 0 | 93.75 |
Sonal Dinusha | c Avishka Perera b Kavindu Nadeeshan | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Chamindu Wijesinghe | run out (Avishka Tharindu) | 29 | 43 | 0 | 0 | 67.44 |
Thashika Nirmal | c Avishka Tharindu b Rohan Sanjaya | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Sandaruwan Chinthaka | b Rohan Sanjaya | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Avishka Lakshan | c Avishka Perera b Chamindu Wickramasinghe | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Praveen de Silva | not out | 9 | 8 | 0 | 0 | 112.50 |
Dilmin Rathnayake | run out (Avishka Perera) | 10 | 10 | 0 | 1 | 100.00 |
Extras | 16 (b 1 , lb 1 , nb 1, w 13, pen 0) |
Total | 269/10 (50 Overs, RR: 5.38) |
Fall of Wickets | 1-17 (5.4) Johanne De Zilva, 2-45 (11.2) Mohammed Shamaz, 3-111 (24.6) Ahan Wicrkamasinghe, 4-0 (26.4) Sonal Dinusha, 5-219 (43.3) Chamindu Wijesinghe, 6-228 (44.2) Thashika Nirmal, 7-245 (46.3) Kamil Mishara, 8-245 (46.4) Sandaruwan Chinthaka, 9-247 (47.1) Avishka Lakshan, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chamindu Wickramasinghe | 10 | 0 | 50 | 1 | 5.00 | |
Ruvin Peiris | 7 | 1 | 38 | 1 | 5.43 | |
Ravindu Rathnayakke | 5 | 0 | 23 | 0 | 4.60 | |
Rohan Sanjaya | 10 | 0 | 50 | 4 | 5.00 | |
Subhanu Rajapakse | 5 | 0 | 41 | 0 | 8.20 | |
Avishka Tharindu | 3 | 0 | 19 | 0 | 6.33 | |
Kavindu Nadeeshan | 10 | 0 | 46 | 2 | 4.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avishka Perera | c Ahan Wicrkamasinghe b Praveen de Silva | 16 | 11 | 4 | 0 | 145.45 |
Chamindu Wickramasinghe | c Sandaruwan Chinthaka b Chamindu Wijesinghe | 13 | 37 | 2 | 0 | 35.14 |
Dunith Jayathunga | lbw b Sandaruwan Chinthaka | 30 | 43 | 2 | 0 | 69.77 |
Umayanga Suwaris | b Dilmin Rathnayake | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Ravindu Rathnayakke | c Kamil Mishara b Chamindu Wijesinghe | 49 | 54 | 4 | 3 | 90.74 |
Avishka Tharindu | lbw b Sonal Dinusha | 32 | 39 | 4 | 0 | 82.05 |
Kavindu Nadeeshan | c Kamil Mishara b Chamindu Wijesinghe | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Chamod Sandaru | c Kamil Mishara b Praveen de Silva | 6 | 15 | 0 | 0 | 40.00 |
Rohan Sanjaya | c Chamindu Wijesinghe b Praveen de Silva | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Ruvin Peiris | c Kamil Mishara b Sonal Dinusha | 14 | 16 | 1 | 1 | 87.50 |
Subhanu Rajapakse | not out | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 11 (b 0 , lb 4 , nb 0, w 7, pen 0) |
Total | 174/10 (38 Overs, RR: 4.58) |
Fall of Wickets | 1-22 (2.6) Avishka Perera, 2-41 (9.5) Chamindu Wickramasinghe, 3-42 (10.3) Umayanga Suwaris, 4-93 (22.2) Dunith Jayathunga, 5-129 (27.1) Ravindu Rathnayakke, 6-130 (27.6) Kavindu Nadeeshan, 7-1560 (33.6) Avishka Tharindu, 8-156 (34.2) Chamod Sandaru, 9-174 (37.3) Ruvin Peiris, 10-174 (38.3) Rohan Sanjaya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Praveen de Silva | 8.2 | 1 | 27 | 3 | 3.29 | |
Avishka Lakshan | 5 | 0 | 41 | 0 | 8.20 | |
Chamindu Wijesinghe | 6 | 1 | 11 | 3 | 1.83 | |
Dilmin Rathnayake | 5 | 0 | 32 | 1 | 6.40 | |
Thashika Nirmal | 4 | 0 | 15 | 0 | 3.75 | |
Sonal Dinusha | 6 | 0 | 20 | 2 | 3.33 | |
Sandaruwan Chinthaka | 4 | 0 | 24 | 1 | 6.00 |
முடிவு – கொழும்பு 95 ஓட்டங்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க