இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றது புனித சில்வெஸ்டர் அணி

197
U19 Schools Roundup Report

2016/17ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் பிரிவு 1 இற்கான நான்கு போட்டிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின.

இப்போட்டிகளில் முதல் நாளில் இரண்டு சதங்கள் பெறப்பட்டும், பல்வேறான திறமைகள் வெளிக்கொண்டுவரப்பட்டும் இருந்த நிலையில், நேற்று இரண்டாம் நாளுடன் போட்டிகள் நிறைவு பெற்றன.

அந்த வகையில், இரண்டாம் நாளாக நேற்று தொடர்ந்த போட்டிகளில், புனித சில்வெஸ்டர் மற்றும் அநுராதபுரம் மத்திய கல்லூரிகளுக்கிடையே  நடைப்பெற்ற போட்டியில்  புனித சில்வெஸ்டர் அணி இன்னிங்ஸ் மற்றும் 194 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஏனைய மூன்று போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றன. போட்டிகளின் முடிவுகள் கீழ் வருமாறு.


புனித சில்வெஸ்டர் கல்லூரி அநுராதபுரம் மத்திய கல்லூரி

புனித சில்வெஸ்டரின் முதல் இன்னிங்ஸுக்காக, ராஜபக்ஷ ஆட்டமிழக்காமல் 111* ஓட்டங்களையும், அவிந்து 94 ஓட்டங்களையும் பெற்று கொடுக்க, அவ்வணி மொத்தமாக 284 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பின்னர் தமது முதலாம் இன்னிங்ஸில் ஆடிய அநுராதபுரம் மத்திய கல்லூரியினால், புனித சில்வெஸ்டர் அணியின் சிறந்த பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 22 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பல்லொவ் ஒன் முறையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதன்போதும் சிறப்பாக புனித சில்வெஸ்டர் அணி பந்து வீசியதால், 17 ஓவர்களில் வெறும் 22 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற அநுராதபுரம் மத்திய கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 194 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி: 284/7 – மஞ்சித் ராஜபக்ஷ 111*, அவிந்து ஹேரத் 94, இசுறு அனுராத 49/3, மதுரங்க சந்துவரத்னே 94/2

அநுராதபுரம் மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 69/10 – டில்ஷான் லக்சித 23*, தூஷித் டீ சில்வா 26/4, மஞ்சுள பெரேரா 15/3, உசிந்து நிஷ்சங்க 6/2

அநுராதபுரம் மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ் : 22/10 – துஷித டீ சொய்சா 12/7

போட்டி முடிவு : புனித சில்வெஸ்டர் அணி இன்னிங்ஸ் மற்றும் 193 ஓட்டங்களால் வெற்றிடி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி புனித திரித்துவக் கல்லூரி

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்று கொள்ள, திரித்துவ கல்லூரி முதல் இன்னிங்ஸுக்காக 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது, 37.3 ஓவர்கள் வீசிய நிலையில் டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி 142 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த வேளையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுற்றது. இதனால் இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 208/10 – தசுன் டெமஷ 62, ஷேஷாட் அமீன் 39, மெத்சித் ஜெயமந்த –34, சனோகீத் 32/3, விமுக்தி நேத்மால் 35/3, மொஹமட் ஸீப் 24/2

புனித திரித்துவ கல்லூரி: 181(89.3)கலன டீ சொய்சா 23, ஹசித்த பாயாகோட 18, பசிந்து ஆதித்யா 29/2, முதித லக்சன் 49/3

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) 142/4 (37.3) ஷேஷாட் அமீன் 76, விஹான் குணசேகர 33

போட்டி முடிவு: வெற்றி தோல்வியின்றி போட்டி சமநிலையில் முடிவு (முதல் இன்னிங்சில் டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி வெற்றி)


ஜனாதிபதி கல்லூரி மரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 

முதல் இன்னிங்ஸுக்காக ஜனாதிபதி கல்லூரி (கோட்டே) 205 ஓட்டங்களையும், மரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 298 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன. இரண்டாம் இன்னிங்ஸுக்காக ஜனாதிபதி கல்லூரி 40 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களை பெற்றிருந்த வேலை ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவு பெற்றது.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்):  205/10 (61.4) – ஹிருன டில்ஷான் 57, மாலக டீ சில்வா 46, ஷாலக்க பண்டார 31, சன்க பூர்ண 54/5, லசித்த 21/2

மரிஸ் ஸ்டெல்லா கல்லூரி: 298/10(89.2) – துஷான் குருகெ 87, ஷெஹான் மனீஷ 31, யோஹான் லியனகே 82/5

 ஜனாதிபதி கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 119/2 (40) – இரங்க ஹேஷான் 53* ஹிருன டில்ஷான் 51*

போட்டி முடிவு : வெற்றி தோல்வியின்றி போட்டி சமநிலை முடிவடைந்தது (முதல் இன்னிங்சில் மரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வெற்றி


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி – புனித தோமஸ் கல்லூரி

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மிகவும் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் 65 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 305 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது. அதன் பின் களம் இறங்கிய புனித தோமஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸுக்காக 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டதால் பல்லொ ஒன் முறையில் தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்தது. எனினும் நேற்றைய ஆட்டநேர முடிவின் போது 77 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தவிர்த்துக்கொண்டது

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 305/8 (65) – டிலங்க மதுரங்க 143, திலான் நிமேஷ் 78, டெஹான் ஸ்சாப்ட்டர் 34/2

புனித தோமஸ் கல்லூரி: 138/10 (54.4) – இஷான் பெரேரா 44, கலன பெரேரா 34, சவிந்து பெர்னான்டோ 19/2, அவிந்து பெர்னாண்டோ 19/2, டிலேஷ் நாணயக்கார 58/2

புனித தோமஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 148/5 (77) – மனித்ரா விஜேவர்தன 37* இஷான் பெரேரா 33

போட்டி முடிவு : வெற்றி தோல்வியின்றி போட்டி சமநிலை (முதல் இன்னிங்சில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி  வெற்றி)

schoolscricketcrawler