மேல் மாகாண தெற்கு அணியை போராடி வென்ற தென் மாகாணம்

150

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (17) நடைபெற்றன.

ஊவா மாகாணம் எதிர் மேல் மாகாணம் மத்திய

அஷேன் டானியல் மற்றும் துனித் வெல்லாலகேவின் அதிரடி பந்துவீச்சு மூலம் ஊவா மாகாணத்திற்கு எதிரான போட்டியில் மேல் மாகாணம் மத்திய அணி 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய உவா மாகாண அணி வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்து 40.1 ஓவர்களில் 83 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையு இழந்தது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கையை சங்கா, அரவிந்த நிராகரிப்பு

இதன்போது வலதுகை சுழல் பந்து விச்சாளர் அஷேன் டானியல் 11 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இடதுகை சுழல் வீரர் துனித் வெல்லாலகே 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேல் மாகாணம் மத்திய அணி 11.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 84 ஓட்டங்களை எட்டியது. துடுப்பாட்டத்தில் சிதார ஹபுஹின்ன 39 ஓட்டங்களை குவித்தார்.

ஊவா மாகாண அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோற்றதோடு மேல் மாகாண மத்திய அணி இரண்டு போட்டிகளிலும் இலகு வெற்றியை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

ஊவா மாகாணம் – 83 (40.1) – அஷேன் டானியல் 3/11, துனித் வெல்லாலகே 3/16, எஸ். தினுஷ 2/14

மேல் மாகாணம் மத்திய – 84/2 (11.1) – சிதார ஹபுஹின்ன 39, டி. இமந்த 2/19

முடிவு – மேல் மாகாணம் மத்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி


தென் மாகாணம் எதிர் மேல் மாகாணம் தெற்கு

சிலாபம் மேரியன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மேல் மாகாண தெற்கு அணியை தென் மாகாணம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

சீரற்ற காலநிலை காரணமாக 37 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் மாகாணம் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேல் மாகாண தெற்கு அணிக்காக ஜனிஷ்க பெரேரா (57) அரைச்சதம் பெற்றார்.

பந்து சேதப்படுத்தல் சர்ச்சையைத் தாண்டி மூன்றாம் நாள் ஆதிக்கம் இலங்கை வசம்

இதன் மூலம் அந்த அணி 34.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் ரவீஷ விஜேசிறி 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் மாகாண அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் கடைசி ஓவர் வரை வெற்றியை நோக்கி போராடியது. குறிப்பாக நவோத் பரணவிதான (42) மற்றும் சுதின் மெண்டிஸ் (41) கணிசமான ஓட்டங்களை பெற்று கைகொடுத்தனர்.

இறுதியில் தென் மாகாண அணி 36.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. மேல் மாகாண தெற்கு அணிக்காக அபாரமாக பந்து வீசிய அவிஷ்க லக்ஷான் 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாணம் தெற்கு – 151 (34.4) – ஜனிஷ்க பெரேரா 57, ரொஹான் சஞ்சய 25, நிஷித அபிலாஷ் 17, நிஷான் பெர்னாண்டோ 15, ரவீஷ விஜேசிறி 3/31, நிபுன் மாலிங்க 2/25, சுதின் டயஸ் 2/29

தென் மாகாணம் – 154/8 (36.1) – நவோத் பரணவிதான 42, சுதின் மெண்டிஸ் 41, ஆதித்ய சிறிவர்தன 22, அவிஷ்க லக்ஷான் 6/19

முடிவு – தென் மாகாண அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி