நிதான துடுப்பாட்டத்தால் தர்ஸ்டன், நாலந்த கல்லூரிகளின் போட்டி சமநிலையில் முடிவு

120

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகள் செவ்வாய்கிழமை (30) நிறைவடைந்ததோடு மேலும் ஒரு போட்டி ஆரம்பமானது.

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி எதிர் ஆனந்த கல்லூரி, கொழும்பு

துஷான் ஹெட்டிகேவின் சதத்தின் மூலம் புனித சில்வெஸ்டர் கல்லூரிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஆனந்த கல்லூரி போட்டியை சமநிலையில் முடித்தது.

>> சந்துன் மெண்டிஸின் சகலதுறை ஆட்டத்தால் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்த ரிச்மண்ட் கல்லூரி <<

தனது சொந்த மைதானத்தில் ஆடிய ஆனந்த கல்லூரி இரண்டாவது நாள் முழுவதும் துடுப்பெடுத்தாடி கடைசி நாள் ஆட்டநேர முடிவின்போது 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 374 ஓட்டங்களை பெற்றது. துஷான் ஹெட்டிகே 102 ஓட்டங்களை பெற்றார். அந்த அணியின் காமேஷ் நிர்மால் (88) மற்றும் அசேல சிகெரா (67) ஆகியோர் சிறப்பாக துடுப்பாடி அரைச்சதம் எடுத்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 308 (89.4) – மனோஹரன் பவித்ரன் 85, நிம்சர அத்தனகல்ல 48, பசன் ஹெட்டியாரச்சி 24, நதீர பாலசூரிய 23, உசிந்து நிஸ்ஸங்க 22, சாமிக்க குணசேகர 2/44, கீசன் விஷ்வஜித் 2/49, ஷமல் ஹிருஷன் 2/52, அசெல் சிகெரா 2/79

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 374/5 (67.5) – துஷான் ஹெட்டிகே 102, காமேஷ் நிர்மால் 88, அசெல் சிகெரா 67, கனிஷ்க ரன்திலக்ககே 31, லஹிரு ஹிரன்ய 39*, நிம்சர அத்தனகல்ல 2/79  

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு

மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தர்ஸ்டன் கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி எந்த அணியும் முதல் இன்னிங்சுக்கான புள்ளியைக் கூட பெறாமல் சமநிலையில் முடிந்தது.

நாலந்த கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தர்ஸ்டன் கல்லூரி முதல் இன்னிங்சுக்கு 278 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நாலந்த கல்லூரி மிக நிதானமாக துடுப்பெடுத்தாடியது.

இதனால் கடைசி நாள் ஆட்டநேர முடிவின்போது நாலந்த கல்லூரி அணி 62.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்   

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 278 (101.3) – ஜனுஷ்க பெர்னாண்டோ 70, நிபுன் லக்ஷான் 30, நிமேஷ் லக்ஷான் 26, யேஷான் விக்ரமாரச்சி 24, அயேஷ் ஹர்ஷன 24, யொஹான் சச்சித்த 20, மஹிம வீரகோன் 2/30, கவீஷ மதுரப்பெரும 2/38, லக்ஷித மானசிங்க 2/57  

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 179/6 (62.4) – அவிஷ்க பெரேரா 61, டில்ஹார பொல்கம்பொல 54, லக்ஷித்த ரசன்ஜன 25, சமிந்து விஜேசிங்க 22*, ஜனுஷ்க பெர்னாண்டோ 3/35  

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை எதிர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு

புனித செபஸ்டியன் கல்லூரி அணி துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சோபித்தபோதும் டி.எஸ் சேனநாயக்க கல்லூரிக்கு எதிரான போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

> முக்கோணத் தொடர் சம்பியனுக்கு பங்களாதேஷ் டெஸ்ட்டில் சவால் தருமா?  <

மத்தேகொட இராணுவப்படை மைதானத்தில் A குழுவுக்காக நடந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட புனித செபஸ்டியன் கல்லூரி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்தியது. இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த டி.எஸ் சேனநாயக்க கல்லூரி அணி 117 ஓட்டங்களுக்கு சுருண்டபோதும் ஆட்ட நேரம் முடிவுற்றது. அதிரடியாக பந்து வீசிய வினுஜ ரனசிங்க 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.      

எனினும் இந்த போட்டியின் முதலாம் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் மூலம் புனித செபஸ்டியன் கல்லூரி அதற்கான புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 331/8d (95) – ஜனிஷ்க பெரேரா 82, ஷனால் பெர்னாண்டோ 81, தருஷ பெர்னாண்டோ 52, பிரவீன் குரே 42, கிஹான் சேனநாயக்க 31*, தசுன் பெரேரா 2/31, நெதுஷன் குமார 2/55, பசிந்து ஆதித்ய 2/64

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு – 117 (41.3) – சந்தரு சந்தித்த 22, வினுஜ ரனசிங்க 4/34, தருஷ பெர்னாண்டோ 2/17, கிஹான் சேனநாயக்க 2/19

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகல்

மலியதேவ கல்லூரி மைதானத்தில் இன்று (30) ஆரம்பமான இப்போட்டியின் பெரும்பாலான நேரம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் 41.1  ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தர்மாசோக கல்லூரி 126 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

நாளை போட்டியின் இரண்டாவது மற்றும் கடைசி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை (முதல் இன்னிங்ஸ்) – 126/6 (41.1) – தினுக்க டில்ஷான் 64*, சுபுன் நிஸ்ஸங்க 2/09