2023 வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெற்றது இலங்கை!

Asian Netball Championship 2022

283

சிங்கபூரில் நடைபெற்றுவரும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் ஹொங் கொங் அணியை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

ஹொங் கொங் அணியை 67-43 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை வலைப்பந்தாட்ட அணி அடுத்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கான தகுதியையும் பெற்றுக்கொண்டது.

தொடர் வெற்றிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்த இலங்கை!

ஏற்கனவே தங்களுடைய இரண்டாவது சுற்றின் இறுதி லீக் போட்டியில் ஹொங் கொங் அணியை வீழ்த்தியிருந்த இலங்கை அணி, மீண்டும் ஹொங் கொங் அணிக்கு எதிராக இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் 17-07 என்ற முன்னிலையுடன் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, அடுத்த மூன்று கால்பகுதிகளையும் 15-09, 15-09 மற்றும் 20-18 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி வெற்றியீட்டியது.

இதேவேளை இன்று நடைபெற்ற மற்றுமொரு அரையிறுதிப்போட்டியில் மலேசிய அணியானது, பலமிக்க மலேசிய அணியை எதிர்கொண்டு 54-41 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு சிங்கபூர் அணி முன்னேறியுள்ளதுடன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கும் தகுதிபெற்றுள்ளது.

இதேவேளை இலங்கை மற்றும் சிங்கபூர் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (11) இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முடிவுகள்

  • இலங்கை 67 – 43 ஹொங் கொங்
  • சிங்கபூர் 54 – 41 மலேசியா

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<