இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வீரர்கள் ஏலத்தின் இறுதிப்பட்டியலில் இலங்கை அணியைச் சேர்ந்த 12 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அடுத்த ஆண்டுக்கான IPL தொடரின் வீரர்கள் ஏலம் எதிர்வரும் 16ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபு தாபியில் நடைபெறவுள்ளது.
குறித்த இந்த ஏலத்துக்காக இந்தியா மற்றும் சர்வதேசத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்திருந்தனர்.
>>சொந்த மண்ணில் ஓய்வு பெற ஆசை; சகீப் அல் ஹசன் விருப்பம்<<
இதிலிருந்து தற்போது ஏலத்திற்காக 350 வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், 240 இந்திய வீரர்கள் மற்றும் 110 வெளிநாட்டு வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இந்த வீரர்கள் ஏலத்தின் இறுதிப்பட்டியலில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான வனிந்து ஹஸரங்க, மதீஷ பதிரண, மஹீஷ் தீக்ஷன, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தசுன் ஷானக மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுடன் அண்மைக்காலத்தில் இலங்கை அணிக்காக அறிமுகமாகிய விஜயகாந்த் வியாஸ்காந்த், இளம் வீரர் துனித் வெல்லாலகே ஆகியோருடன், மஹீஷ் தீக்ஷன பாணியில் பந்துவீசக்கூடிய புதுமுகு வீரர் டிரவீன் மெதிவ் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இம்முறை IPL வீரர்கள் ஏலத்தின் மூலம் மொத்தமாக 77 வீரர்களை அணிகளால் வாங்க முடியும் என்பதுடன், 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
IPL ஏலத்தில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்களின் பட்டியல்
வனிந்து ஹஸரங்க, மதீஷ பதிரண, மஹீஷ் தீக்ஷன, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தசுன் ஷானக, பினுர பெர்னாண்டோ, டிரவீன் மெதிவ்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















