CPL தொடரில் டுவைன் பிராவோவிற்கு பயிற்சியாளர் பதவி

Caribbean Premier League 2025

177
Dwayne Bravo

இந்த ஆண்டு கரீபியன் பீரிமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் மற்றும் அந்த அணியின் முன்னாள் தலைவர் டுவைன் பிராவோ நியமிக்கப்படுள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 13ஆவது அத்தியாயமானது ஆகஸ்ட் 14ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரரும், அந்த அணியின் முன்னாள் தலைவருமான டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் டுவைன் பிராவோ கருத்து தெரிவிக்கையில், ‘எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான அணியான டிரின்பாகோ நைட் ரைடர்ஸின் தலைமைப் பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது இது எனக்கு கிடைத்த ஒரு மரியாதை. கடந்த சில ஆண்டுகளாக பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் அளித்த நேரம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் எனக்கும், எனது ஊழியர்களுக்கும் இப்புதிய சவாலை நான் இப்போது எதிர்நோக்குகிறேன்’ என்று கூறியுள்ளார்.

டுவைன் பிராவோ கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை கரீபியன் பிரீமியர் லீக்  தொடரில் விளையாடிய நிலையில் அதில் 11 அத்தியாயங்களில் அவர் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி 5 தடவைகள் சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். அதேசமயம், கடந்த 2021ஆம் ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அவர் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் தலைவராகச் செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரை பொறுத்தவரையில் டிவைன் பிராவோ 107 போட்டிகளில் விளையாடி அதில் 1155 ஓட்டங்களையும், 129 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதுபோன்ற சூழலில் தான் தற்சமயம் டுவைன் பிராவோ டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிர்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும், இவர் ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<