டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்ற நிலையில், மெய்வல்லுனர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதில் குறிப்பாக மெய்வல்லுனரில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சாதனைகள் வரிசையாக முறியடிக்கப்பட்டு வருகிகின்றன.
முக்கியமாக ஓட்டப் போட்டிகளில் வரிசையாக ஒலிம்பிக் சாதனைகள் மற்றும் உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மெய்வல்லுனர் போட்டிகளின் 6ஆவது நாளான இன்று (04) பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் அமெரிக்காவின் சிட்னி மெக்லேர்லின் புதிய உலக சாதனை படைத்தார்.
எனவே, டோக்கியோ ஒலிம்பிக்கின் 12ஆவது நாளில் இடம்பெற்ற முக்கிய போட்டி நிகழ்ச்சிகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
உலக சாதனை படைத்த 21 வயது வீராங்கனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியை 51.46 செக்கன்களில் கடந்து புதிய உலக சாதனையுடன் அமெரிக்காவின் சிட்னி மெக்லோக்லின் தங்கப் பதக்கம் வென்றார்.
முன்னதாக கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற அமெரிக்காவின் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியை 51.90 செக்கன்களில் நிறைவுசெய்து உலக சாதனையை முறியடித்த 21 வயதான சிட்னி, மீண்டும் தனது சொந்த உலக சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
அத்துடன், 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் உலகிலேயே வேகமான வீராங்கனை என்ற அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார்.
இதனிடையே, பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டலில் நடப்பு உலக சம்பியனும், 2016 ரியோ ஒலிம்பிக்கில தங்கப் பதக்கம் வென்றவருமான அமெரிக்காவின் டலிலாஹ் முஹம்மட் போட்டியை 51.58 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஐரோப்பிய சாதனையுடன் நெதர்லாந்து வீராங்கனை பெம்கி போல் (52.03 செக்.) வெண்கபலப்ப பதக்கம் வென்றார்.
இதுஇவ்வாறிருக்க டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது இரு பாலாருக்குமான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டிகளில் உலக சாதனைகள் அடுத்தடுத்த தினங்களில் நிலைநாட்டப்பட்டமை விசேட அம்சமாகும்.
முன்னதாக நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் நோர்வே வீரர் கார்ஸ்டன் வோர்ஹோல்ம், உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டோக்கியோவை சாதனைகளால் அலங்கரித்த மும்மூர்த்திகள்
ஒலிம்பிக் 200 மீட்டரில் புது சம்பியன்
டோக்கியோ ஒலி;ம்பிக் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் கனடாவின் ஆண்ட்ரூ டி கிராஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ தேசிய விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீட்டர் இறுதிப் போட்டியை 19.62 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 200 மீட்டரில் தனது அதிசிறந்த காலத்தையும், கனடாவின் தேசிய சாதனையையும் முறியடித்தார்;.
அதுமாத்திரமின்றி, 93 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் வரலாற்றில் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற முதல் கனடா நாட்டு வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக 1928 ஆம்டர்டாம் ஒலிம்பிக்கில் பேர்ஸி வில்லியம்ஸ் ஆண்களுக்கான 200 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துக்கான தனது 7 ஆண்டுகள் கனவு இன்று நடைபெற்ற 200 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் 26 வயதான ஆண்ட்ரூ டி கிராஸ் நிறைவேற்றியுள்ளார்.
அதுமாத்திரமின்றி, கடந்த மூன்று (2008, 2012, 2016) ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்த உசைன் போல்ட்டின் வெற்றிடத்தை தொடர்ந்து தற்;போது புதிய ஒலிம்பிக் சம்பியனாக 200 மீட்டரில் ஆண்ட்ரு டி கிராஸ் முத்திரை பதித்துள்ளார்.
இதனிடையே, குறித்த போட்டியில் அமெரிக்கா வீரர்களான கென்னி பெட்னரெக் வெள்ளிப் பதக்கத்தையும், நோவாஹ் லையல்ஸ் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
உகண்டாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்கம்

குறித்த போட்டியை 9 நிமிடங்கள் 01.45 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், உகண்டாவுக்கு முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த வீராங்கனையாக இடம்பிடித்தார்.
இந்தப் போட்டியில் அமெரிக்காவின் கோர்ட்னி பிரீச்ஸ் வெள்ளிப் பதக்கத்தையும், கென்யாவின் ஹைவின் கியேங் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
Photos: Mathilda Karlsson | 2020 Tokyo Olympics Equestrian
ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சாதனை

இதன்மூலம் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வீரராக வரலாறு படைத்தார்.
இதன்படி, எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறும் ஈட்டி எறிதலுக்கான இறுதிப் போட்டியில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
முன்னதாக உலக கனிஷ;ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் எறிந்து தங்க பதக்கம் வென்ற நீரஜ், கனிஷ்ட உலக சாதனை படைத்தார்.
அதன்பிறகு நடைபெற்ற 2018 பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாக்களில் தங்கப் பதக்கம் வென்றார்.
எனவே, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதலாவது மெய்வல்லுனர் பதக்கத்தை அவர் பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் 85.16 செக்கன்களில் நிறைவுசெய்து 7ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
2019 தெற்காசிய விளையாட்டு விழாவில் புதிய தெற்காசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷாத், 2018 ஆசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகின் அதிவேக வீரராக மகுடம் சூடிய இத்தாலியின் நீளம் பாயதல் வீரர்
நீச்சல் மரதனில் பிரேசிலுக்கு தங்கம்

நீச்சல் மரதனில் ஐந்து தடவைகள் உலக சம்பியன் பட்டம் வென்று அனா, 16 வயதில் அதாவது 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் முதல்தடவையாக இந்தப் போட்டியில் களமிறங்கியிருந்தாலும், இதுதான் அவரது முதல் ஒலிம்பிக் பதக்கமாகும்.
இதனிடையே, 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நெதர்லாந்து வீராங்கனை nஷரொன் வான் ருவென்டால் வெள்ளிப் பதக்கத்iயும், அவுஸ்திரேலியாவின் கரீனா லீ வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு பதக்கம்

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் 57 கிலோ எடை பிரிவுக்கான ப்ரீ ஸ்டைலில் கஸகஸ்தான் வீரர் நுர்இஸ்லாம் சனாயேவை 7-9 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அவர் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.
இந்த வெற்றி மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் ஒரு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
Photos: India vs Great Britain – Men’s Q4 | Tokyo 2020 Olympic Games
பளுதூக்குதலில் மற்றுமொரு உலக சாதனை

குறித்த போட்டியில் ஸ்னெட்ச் முறையில் 223 கிலோ எடையையும், க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 265 கிலோ எடையையும் தூக்கிய அவர், ஒட்டுமொத்தத்தில் 488 கிலோ எடையைத் தூக்கி உலக சாதனை படைத்தார்.
இந்தியாவிற்கு இரண்டாவது வெண்கலம்

எனவே போட்டி விதிமுறைப்படி, அரை இறுதிக்கு சென்றதால் லவ்லினா வெண்கலம் வென்று ஆறுதல் அடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3ஆவது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பளுதூக்குதலில் மீராபாய் சானு (வெள்ளி), பெர்மிண்;டனில் சிந்து (வெண்கலம்) பதக்கம் வென்றிருந்தனர்.
இதுதவிர ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு கிடைத்த 3ஆவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன் விஜேந்தர் சிங் (2008, பீஜிங்), மேரி கோம் (2012, லண்டன்) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர்.
33 ஆண்டு ஒலிம்பிக் சாதனையை முறியடித்த எலைன் தோம்சன்
சீனா தொடர்ந்து முதலிடம்

இதன்படி, சீனா 32 தங்கம், 22 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கம் பெற்று முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 25 தங்கம், 31 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கம் பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது.
ஜப்பான் 21 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலத்துடன் 3ஆவது இடத்தில் உள்ளது.
மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…




















