ஐ.சி.சி. இன் வரலாற்று கதாநாயகர்கள் பட்டியலில் மேலும் மூவர்

168

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) வரலாற்று கதாநாயகர்கள் பட்டியலில் (ICC Hall of Fame) மேலும் மூவர் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை சறுக்கியது எங்கே?

அந்தவகையில் ஐ.சி.சி. இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்புக்கு அமைய இந்தப் பட்டியலில் இணைந்த மேலதிக வீர, வீராங்கனைகளாக மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்ட நட்சத்திரம் சிவ்நரைன் சந்தர்போல், இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் வீராங்கனை சரோலெட் எட்வாட்ஸ் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் சுழல் ஜாம்பவான் அப்துல் காதிர் ஆகியோர் மாறியிருக்கின்றனர்.

ஐ.சி.சி. இன் வரலாற்று கதாநாயகர்கள் பட்டியலில் இணைக்கப்படும் வீர, வீராங்கணைகள் கிரிக்கெட் விளையாட்டுக்காக ஆற்றிய சேவைகளுக்கு கெளரவிக்கும் நோக்கில் தெரிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தப் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவன்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் இணைந்திருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

அதேவேளை புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்ட மூவரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் ஊடக பிரமுகர்கள் ஆகியோரின் பங்கேற்போடு நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாகவே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

>>  அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் குணதிலக்க இடைநீக்கம்!

இதேவேளை புதிதாக பட்டியலில் உள்வாங்கப்பட்ட மூவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ண தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் வைத்து நாளை (09) கெளரவிக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<