மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகும் திரிமான்ன

198

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரரான லஹிரு திரிமான்ன, மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகள் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற லஹிரு திரிமான்ன, தனது மனைவி இரண்டாவது குழந்தையினை எதிர்பார்த்திருப்பதன் காரணமாகவே மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் விலகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

லஹிரு திரிமான்ன அவுஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் அணி ஒன்றுக்காக விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியதனை தொடர்ந்து அவர் இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஓய்வினை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இந்த தான் ஓய்வு பெறும் விடயத்தினை மறுத்திருக்கும் லஹிரு திரிமான்ன,  இலங்கை – மேற்கிந்திய தீவுகள் பங்குபெறும் டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் (சொந்தக்காரணங்களுக்காக) ஓய்வு பெறுவதாக தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2021ஆம் ஆண்டின் முன்னர் இலங்கை அணிக்கு தொடர்ச்சியாக விளையாடாத போதும், 2021ஆம் ஆண்டில் மீண்டும் இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஆடும் வாய்ப்பினைப் பெற்ற லஹிரு திரிமான்ன, இந்த ஆண்டு இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 50 இற்கு அதிகமான சராசரியுடன் 659 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, திரிமான்ன இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியில் இணையும் ஜேம்ஸ் வின்ஸ்

இதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 21ஆம் திகதி காலியில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த டெஸ்ட் தொடரில் ஆடும் இலங்கை அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<