இலங்கை பயிற்றுவிப்பு குழாத்தில் இணையும் கண்டம்பி, சந்தன

Zimbabwe tour of Sri Lanka 2023

393
Kandamby, Chandana and Fonseka assigned to the coaching

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இ்ந்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் பங்குபற்றவுள்ள இலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்களை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.

இந்த 2 நியமனங்களும் ஜிம்பாப்வே தொடருக்காக மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் திலின கண்டம்பி நியமிக்கப்பட்டுள்ளதுடன், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக உபுல் சந்தன பெரியடப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான உபுல் சந்தன 16 டெஸ்ட் மற்றும் 146 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக ஆடி இருப்பதோடு, இடதுகை துடுப்பாட்ட வீரரான திலின கண்டம்பி 39 ஒருநாள் மற்றும் 5 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.

இதனிடையே, இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இருந்த நவீட் நவாஸ், இந்த சுற்றுப்பயணத்தில் அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

கிறிஸ் சில்வர்வுட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தொடர்ந்து பணியாற்றவுள்ளதுடன், களத்தடுப்பு பயிற்சியாளராகப் பணியாற்றிய அன்டன் ரூக்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக குறிப்பிட்ட காலத்திற்கு அணியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணியின் Trainer ஆக கடமையாற்றிய கிரான்ட் லூடன் பதவி விலகியதன் காரணமாக இதற்கு முன்னர் அதே பதவியில் பணியாற்றிய டில்ஷான் பொன்சேகாவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், போட்டிகள் ஜனவரி 18 ஆம் திகதி வரை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<