சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக சதம் குவித்த டில்ஷான் சஞ்சீவ மற்றும் லசித் க்ரூஸ்புள்ளே

88

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் இளம் வீரர்களுக்கான மேஜர் எமர்ஜிங் லீக் இரண்டு நாள் போட்டியின் இரு குழுநிலை ஆட்டங்கள் இன்று (05) நிறைவடைந்தன.

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

டில்ஷான் சஞ்சீவ மற்றும் லசித் க்ரூஸ்புள்ளேவின் அபார சதங்கள் மூலம் வலுவான துடுப்பாட்டத்தை வெளிடுப்பத்திய சிலாபம் மேரியன்ஸ் அணி ப்ளூம்பீல்ட் கழகத்துக்கு எதிரான போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது. 

இலங்கை இளையோர் அணியைக் காப்பாற்றிய தனன்ஞய

சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19…

கட்டுநாயக்க, மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ப்ளூம்பீல்ட் நிதானமாக துடுப்பாடிய போதும் 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது அந்த அணி 69.3 ஓவர்களுக்கு முகம்கொடுத்ததால் போட்டியில் தோல்வி ஒன்றை தவிர்ப்பதற்கு அது போதுமாக இருந்தது. 

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் அணி போட்டியில் வெற்றி பெற முயற்சிக்காமல் இரண்டாவது நாளான இன்று முழு நேரமும் துடுப்பெடுத்தாடி 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 435 ஓட்டங்களை பெற்றது. 

21 வயதான இடது கை துடுப்பாட்ட வீரர் டில்ஷான் சஞ்சீவ அபாரமாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 132 ஓட்டங்களை பெற்றார். அதேபோன்று லசித் க்ரூஸ்புள்ளே 112 ஓட்டங்களை குவித்தார். 

போட்டியின் சுருக்கம்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 157 (69.3) – அசேல் சிகேரா 47, கசுன் ஏக்கநாயக்க 33, ரெவேன் கெல்லி 20, நவீன் குணவர்தன 3/25, கவிந்து பண்டார 2/10, கிரிஷான் சில்வா 2/17 

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 435/7 (94) – டில்ஷான் சஞ்சீவ 132*, லசித் க்ரூஸ்புள்ளே 112, சனொஜ் விஜேதுங்க 53, இமேஷ் உபமால் 40, கவிந்து இரோஷ் 38, கவிந்து பண்டார 30, கசுன் அபேரத்ன 2/43 

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

SSC எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

SSC அணிக்கு எதிராக கடற்படை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது. 

SSC கழகத்தின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட SSC அணி 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் பாதிக்கு அதிகமான ஓட்டங்களை (68) அஹான் விக்ரமசிங்க பெற்றார். 

சிறப்பாக பந்துவீசிய சவிந்து பீரிஸ் மற்றும் கவித்த டில்ஷான் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

MCA ப்ரீமியர் லீக்கின் லீக் சம்பியனானது எல்.பி.பினான்ஸ்!

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27ஆவது சிங்கர் – MCA ப்ரீமியர்…

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கடற்படை விளையாட்டுக் கழகம் சார்பில் ஜொஹான்னே டி சில்வா (82) மற்றும் சலித் பெர்னாண்டோ (51*) அரைச்சதம் பெற்றனர். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கடற்படை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 239 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம் 

SSC (முதல் இன்னிங்ஸ்) – 126 (28.4) – அஹான் விக்ரமசிங்க 68, சவிந்து பீரிஸ் 4/29, கவித்த டில்ஷான் 4/36

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 239/4 (66) – ஜொஹான்னே டி சில்வா 82, சாலித்த பெர்னாண்டோ 51*, நவோத் சமரகோன் 45, ஹிமேஷ் ராமனாயக்க 2/36, ஆகாஷ் செனரத்ன 2/73

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு  

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<