IPL தொடரில் விளையாட முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு அனுமதி மறுப்பு

228

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு, நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹெரி கேர்னி, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதனை காரணம் காட்டி இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

பங்களாதேஷ் தொடருக்காக பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை அணி

இந்தநிலையில், அவருக்குப் பதிலாக முஸ்தபிசூர் ரஹ்மானைத் தேர்வு செய்ய கொல்கத்தா அணி விரும்பியது. ஆனால் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு அவருக்கு பங்களாதேஷ்  கிரிக்கெட் சபை அனுமதி மறுத்துள்ளது.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பங்களாதேஷ் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதன் காரணமாக அவருக்கு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் போட்டிகளுக்கான செயற்பாட்டுக் குழுவின் தலைவர் அக்ரம் கான் கருத்து தெரிவிக்கையில்,

”எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எங்கள் அணி இலங்கை சென்று விளையாட இருக்கிறது. எனவே, முஸ்தபிசூர் ரஹ்மான் எங்களுக்கு முக்கியமான வீரர் என்பதால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட அவருக்கு தடையில்லா சான்றிதழ் நாங்கள் வழங்கவில்லை” என தெரிவித்தார்.

Video – சென்னை சுப்பர் கிங்ஸ் vs Suresh Raina நடந்தது என்ன?|Sports RoundUp – Epi 130

24 வயதான முஸ்தபிசூர் ரஹ்மான், இதுவரை ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக 24 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இறுதியாக அவர், 2018ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது அந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அத்துடன், 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர், 17 போட்டிகளில் 17 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

எதுஎவ்வாறாயினும், கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் முஸ்தபிசூர் ரஹ்மான் இடம்பெற்றிருந்தாலும், அவரை எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<