இலங்கை ரக்பியின் களங்கமற்ற வீரன் – சுஹிரு அந்தனி

243
Suhiru Anthony

இலங்கை ரக்பி வட்டாரத்தில் அமைதி சுபாவமுடைய வீரர் ஒருவராக பெயர் பெற்றுள்ள போதிலும், ரக்பி விசிறிகள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட ஒரு வீரர்தான் சுஹிரு அந்தனி.

Suhiru Anthony6’1″ உயரத்துடனும் 98 kg நிறையுடனும் பலமிக்க உடல்வாகுவை கொண்டுள்ள சுஹிரு அந்தனி, எவ்வேளையும் தனது புன்னகையினால் பிறரை கவர்ந்திழுக்கக் கூடிய வீரராவார். ஆடுகளத்திலும் சரி, ஆடுகளத்தின் வெளியிலும் சரி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அல்லது ஆக்ரோஷமாக காணப்படும் மற்றைய வீரர்களை போலல்லாது, வெற்றி தோல்விகளை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் ஒரு வீரராவார்.

தனது திறமை காரணமாக இதுவரை அவர் விளையாடியுள்ள அனைத்து அணிகளினதும் தொடக்க வரிசையில் நிரந்தர வீரராக உள்ளடக்கப்பட்டு வந்துள்ளார். 15 ஆவது வயதில் புனித பேதுரு கல்லூரியில் ரக்பி விளையாட்டை ஆரம்பித்த சுஹிரு அந்தனி, விளையாட்டின் அடிப்படைகளை திரு. ஷாந்த தர்மரத்னவிடமிருந்து கற்றுக் கொண்டார். பாடசாலை மாணவனாக இருந்த காலம் முதல் பிற்காலத்தில் ஒரு ரக்பி வீரராக வருவதை இலட்சியமாகக் கொண்டிருந்த இவர், புனித பேதுரு கல்லூரியின் மற்றுமொரு வீரரான டிலங்க விஜேசேகரவை முன்மாதிரியாக கொண்டிருந்தார். மேலும் சுஹிரு அந்தனி பிரான்ஸ் அணி வீரர் செபஸ்டியன் செபாலின் ரசிகராவார்.

சுஹிரு 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை புனித பேதுரு கல்லூரி அணியின் முக்கிய முன்கள வீரர்களில் ஒருவராக விளையாடினார். 2010 ஆம் ஆண்டு தனது கல்லூரி பாடசாலை மட்டத்தின் மூன்று சுற்றுப்போட்டிகளிலும் சம்பியன் பட்டத்தை வென்றமை தனது பாடசாலை ரக்பி வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் என அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற 20 வயதிற்கு உட்பட்டோருக்கான சுற்றுத்தொடரில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். ThePapare உடனான கலந்துரையாடலில், தனது முன்னாள் பயிற்றுவிப்பாளர்களான சனத் மார்ட்டிஸ் மற்றும் கொலின் தினேஷ் அவர்களின் ஆலோசனைகள் தன்னை சிறந்த ரக்பி வீரராக வளர்த்துக்கொள்ள உதவியாக அமைந்ததையும் அவர் நினைவு கூறினார்.

Suhiru AnthonySuhiru AnthonySuhiru AnthonySuhiru AnthonySuhiru Anthony

பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து கொண்டதன் பின்னரும் ரக்பி விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்ட சுஹிரு, 2011 ஆம் ஆண்டு கடற்படை விளையாட்டுக் கழக அணியில் இணைந்து கொண்டார். கழக மட்டத்தில் இவரது முதல் பயிற்றுவிப்பாளராக ரொனி இப்ராஹிம் காணப்பட்டதுடன், தேசிய அளவில் திறமையை வெளிக்காட்டக் கூடிய ஒரு தொழில்முறை ரக்பி வீரராக தன்னை வழிகாட்டி வடிவமைத்தது அவர்தான் எனவும் தெரிவித்தார்.

“எனது பயிற்றுவிப்பாளர் ரொனி இப்ராஹிம் அவர்களே எனது திறமையை வெளிக்கொண்டுவர காரணமாக அமைந்ததுடன், அதன் காரணமாக எனக்கு 2012 ஆம் ஆண்டு அணிக்கு எழுவர் கொண்ட இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதை நான் பெருமையாக கருதுகின்றேன்.”

கடற்படை அணியின் மற்றைய பயிற்றுவிப்பாளர்களான லெனார்ட் டி சில்வா மற்றும் மோதிலால் ஜயதிலக்க ஆகியோரின் பங்களிப்பையும் அவர் நினைவுகூர தவறவில்லை.

Suhiru Anthony 1தனது 22 ஆவது வயதில் அணிக்கு 15 பேரைக் கொண்ட இலங்கை தேசிய அணியில் சுஹிரு உள்ளடக்கப்பட்டார். 2013 ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய ரக்பி
சுற்றுத்தொடரே இவரது முதல் தொடராக அமைந்ததுடன், கசகஸ்தானுடனான போட்டி இவரது கன்னிப் போட்டியாக இருந்தது. இப்போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றியீட்டியமையும் குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இலங்கை தேசிய அணியின் நிரந்தர வீரர் ஒருவராக சுஹிரு அந்தனி போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

அதேவேளை இவர் கடற்படை அணி சார்பாகவும் கழக போட்டிகளில்Suhiru Anthony விளையாடியதுடன், 2013/2014ஆம் ஆண்டு பருவகாலத்தில் இரண்டு சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டி இரட்டை சம்பியனாக முடிசூடிய
அணியின் ஒரு முக்கிய வீரராக இவர் காணப்பட்டார். பின்னர் சுஹிரு கண்டி விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், கடந்த வருடம் அவ்வணி ஒரு போட்டியிலேனும் தோல்வியை தழுவாது மூன்று சுற்றுப்போட்டிகளிலும் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கண்டிக் கழகத்தில் தனக்கு பயிற்சியளித்த ஷோன் விஜேசிங்க அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

தனது ரக்பி வாழ்க்கையில், பாடசாலை, கழக மற்றும் தேசிய மட்ட போட்டிகள் ஒன்றிலேனும் மஞ்சள் அல்லது சிவப்பு அட்டை இவருக்கு காண்பிக்கப்பட்டதில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய ஆனால் உண்மையான விடயமாகும். சிறந்த போட்டி மனப்பான்மையுடன், களங்கமற்ற வீரராக தனது திறமையை அனைத்து மட்டங்களிலும் வெளிக்காட்டி வருகின்ற சுஹிரு அந்தனி எம்மில் பலருக்கு சிறந்த முன்மாதிரி ஆவார்.