மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லங்கன் ப்ரீமியர் லீக் T20 தொடரானது (LPL), எதிர்வரும் நாட்களில் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கடந்த நாட்களில் உருவாகியிருந்தன.
இலங்கை கிரிக்கெட் சபை (SLC), லங்கன் ப்ரீமியர் லீக் தொடரை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடாத்துவதற்கான திட்டங்களை வைத்திருந்தது. எனினும், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக குறித்த முயற்சியை பிற்போட வேண்டி ஏற்பட்டது. ஆனால், இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்று குறைவடைந்ததனை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு, லங்கன் ப்ரீமியர் லீக் தொடரை நடாத்துவதற்கான நம்பிக்கை மீண்டும் பிறந்தது.
மோசமான சாதனைக்கு சொந்தக்காரர்களாகிய 5 பந்துவீச்சாளர்கள்!
அந்த வகையில், இலங்கை அரசாங்கம் மார்ச் மாதம் தொடக்கம் மூடப்பட்ட தமது வான் எல்லைகளை ஆகஸ்ட் மாதம் திறக்கும் என அறிவிக்க இலங்கை கிரிக்கெட் சபை இந்த ஆண்டுக்கான லங்கன் ப்ரீமியர் லீக் தொடரினை ஆகஸ்ட் 8ஆம் திகதியில் இருந்து 22ஆம் திகதி வரை நடாத்த தீர்மானம் ஒன்றை மேற்கொண்டது. எனினும், இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றின் சமூகப் பரவல் ஏற்படுவதற்கான அபாய நிலைமை ஒன்று உருவாகிய காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தமது முடிவை மீள் பரீசிலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.
தற்போது கொவிட்-19 வைரஸ் தொற்றின் சமூகப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுவதனால், இலங்கை கிரிக்கெட் சபை, ஆகஸ்ட் 28ஆம் திகதி தொடக்கம் லங்கன் ப்ரீமியர் லீக் தொடரை நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டி விசாரணை பற்றி சங்கக்கார
ஆனால், சில ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கமே இலங்கை அரசாங்கம் தமது வான் எல்லைகளை திறக்கும் தெரிவிக்கப்படுவதால் ஆகஸ்ட் 28ஆம் திகதியிலும் லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் நடைபெறுவது சந்தேகமாகியிருக்கின்றது. ஏனெனில், லங்கன் ப்ரீமியர் லீக் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க இலங்கை அரசாங்கம் தமது வான் எல்லைகளை திறக்க வேண்டும்.
ஆனால், லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் ஆகஸ்ட் 28ஆம் திகதி ஆரம்பமாகப்போகின்றது என வெளியாகியிருக்கும் தகவலில் இருந்து மற்றுமொரு ஊகத்தினையும் எடுத்துக்கொள்ள முடியும். அந்த ஊகம் லங்கன் ப்ரீமியர் லீக் தொடரை உள்ளூர் வீரர்களை மாத்திரம் கொண்டு நடாத்துவதாகும். அவ்வாறு இந்த தொடர் நடைபெறும் எனில், அது ஒரு மாகாண உள்ளூர் கிரிக்கெட் தொடர் போன்று இருக்கும்.
முன்னதா இலங்கை கிரிக்கெட் சபை லங்கன் ப்ரீமியர் லீக் தொடரில் 5 அணிகள் பங்கேற்கும் என குறிப்பிட்டிருந்ததுடன், ஒரு அணி கூடுதலாக 6 வெளிநாட்டு வீரர்களையும், போட்டிகளில் விளையாடும் போது 4 வீரர்களையும் பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்திருந்தது.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டி விசாரணை பற்றி சங்கக்கார
இதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை கடந்த மாதம் லங்கன் ப்ரீமியர் லீக் தொடருக்கான சில அனுசரணையாளர்களை பெற்றது என தகவல்கள் வெளியாகிய போதிலும், அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடகக் குழுவினால் இன்னும் வெளியிடப்படவில்லை.
மறுமுனையில், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக தடைப்பட்டுப் போன “பிரிவு – A” ப்ரீமியர் லீக் தொடரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது எனக் கூறப்படுவதனால், இதுவும் லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் நடைபெறுகின்ற காலப்பகுதியில் செல்வாக்குச் செலுத்த முடியும்.
விடயங்கள் இவ்வாறு இருக்க, கொவிட்-19 தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணம் இரத்துச் செய்யப்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஐ.பி.எல். தொடரை செப்டம்பர் 26ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 8ஆம் திகதி வரையில் நடாத்தவுள்ளது. எனவே, இலங்கை கிரிக்கெட் சபைக்கு இந்த காலப்பகுதியிலும் லங்கன் ப்ரீமியர் லீக் தொடரை நடாத்துவது சிரமமாக இருக்கும்.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டி விசாரணை பற்றி சங்கக்கார
அதேநேரம், கொவிட்-19 வைரஸ் தொற்றினால் கிரிக்கெட் போட்டிகள் பல தடைப்பட்ட காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பெரும் பொருளாதார நெருக்கடியும் உருவாகியிருக்கும். எனவே, லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் போன்ற பணம் கொழிக்கும் கிரிக்கெட் தொடர் ஒன்றினை நடாத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபைக்கு வலிமையான உள்ளூர், வெளிநாட்டு அனுசரணையாளர்கள் அவசியம்.
இவ்வாறாக பல தடைகள் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை கிரிக்கெட் சபையினால் லங்கன் ப்ரீமியர் லீக் தொடரை வெற்றிகரமாக நடத்த முடியுமா? இந்தக் கேள்விக்கு நேரம் மாத்திரமே பதில் சொல்லும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க