லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் அணிகளான கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுடனான ஒப்பந்தங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தொடர் உரிமையாளர்களான இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மற்றும் IPG குழுமம் ஆகிய இரு அமைப்புக்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
>> 2ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் இளையோரிடம் வீழ்ந்தது இலங்கை
இந்த விடயம் தொடர்பில் வெளியாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் ஏற்பட்டாளர்களான IPG குழுமம் கொழும்பு, ஜப்னா ஆகிய இரண்டு அணிகளினதும் முகாமையாளர்கள், தொடரின் விதிமுறைகளுக்கு அமைய ஒழுகி நடக்காத காரணத்தினால் அவ்வணிகளுடனான ஒப்பந்தத்தினை நீக்கி கொள்வதாக இலங்கை கிரிக்கெட் சபையிடம் உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளது.
இரு அணிகளின் ஒப்பந்தங்களும் நீக்கப்பட்டிருப்பதன் காரணமாக புதிய லங்கா பிரீமியர் லீக் பருவத்தில் புதிய உரிமையாளர்களினை பெறும் என எதிர்பார்கப்படுகின்றது.
LPL தொடரின் ஆறாவது பருவத்திற்கான போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை மாத இடைவெளியில் நடைபெறும் என நம்பப்படும் நிலையில் தொடரின் திகதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<