தகாத வார்த்தைகளைப் பிரயோகித்த தமிம் இக்பாலுக்கு அபராதம்!

Sri Lanka Tour of Bangladesh - 2021

128
tamim iqbal
@SLC media

இலங்கை அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியின் போது தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் தமிம் இக்பாலுக்கு போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வெள்ளிக்கிழமை நிறைவுக்கு வந்ததுடன், 3ஆவது போட்டியில் 97 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி பெற்றதுஎனினும், முன்னதாக நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் பங்களாதேஷ்  அணி வெற்றிபெற்றதால் தொடரை 2க்கு 1 என அந்த அணி கைப்பற்றியது.

>> ஆறுதல் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி

இந்த நிலையில், டாக்காவில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடிய போது துஷ்மன்த சமீர வீசிய 10வது ஓவரில் நிரோஷன் டிக்வெல்லவிடம் பிடிகொடுத்து தமிம் இக்பால் ஆட்டமிழந்தார்.

இதனை கள நடுவர் ஆட்டமிழப்பு என தீர்ப்பு வழங்கிய போதிலும், தமிம் இக்பால் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளாமல் 3ஆவது நடுவரிடம் மேல்முறையீடு செய்தார்இதனையடுத்து தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் ஊடாக குறித்த ஆட்டமிழப்பை ஆய்வு செய்த போது அவருடைய ஆட்டமிழப்பு சரியானது என அறிவிக்கப்பட்டது

இதனால் ஆத்திரமடைந்த தமிம் இக்பால் கள நடுவர் மீதிருந்த கோபத்தில், மோசமான வார்த்தைகளை பிரயோகித்த வண்ணம் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து போட்டியின் பிறகு கள நடுவர்கள் இதுகுறித்த புகாரை எழுப்ப, தமிமும் தான் அப்படி பேசியதை ஒப்புக் கொண்டார். இதனால், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை தேவை இல்லை என்பதால் அவருக்கு அபராதம் மாத்திரம் விதிப்பதற்கு போட்டி மத்தியஸ்தரான நயிமுர் ராஷீட் நடவடிக்கை எடுத்துள்ளார்

இதுகுறித்து .சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிம் இக்பால் .சி.சி இன் நடத்தை விதிகளின் பிரிவு 2.3 மீறியது கண்டறியப்பட்டது.

அத்துடன், இதுஒரு சர்வதேச போட்டியின் போது தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதுதொடர்பான பிரிவின் கீழ் இடம்பெற்றதனால் தமிம் இக்பால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்

இதன்படி, குற்றத்தை ஒப்புக்கொண்ட தமிம் இக்பாலுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட பிறகு தமிம் இக்பால் மீது முன்வைக்கப்பட்ட முதல் குற்றமாக இது பதிவாகியுள்ளது.

எதுஎவ்வாறாயினும், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தனக்கு வழங்கிய ஆட்டமிழப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிம் இக்பால் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<