அடுத்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் இந்தியாவில்

742

அடுத்த ஆண்டுக்கான ஆடவர் T20 உலகக் கிண்ணம் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

CPL தொடரை இழக்கும் ஆப்கான் இளம் வீரர்கள்

எனினும் ஒத்திவைக்கப்பட்ட T20 உலகக் கிண்ணமும், அடுத்த T20 உலகக் கிண்ணமும் 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெறும் என ஐ.சி.சி. முன்னர் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறு திகதி அறிவிக்கப்பட்ட T20 உலகக் கிண்ணத் தொடர்களில்  2021 ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரே இந்தியாவில் நடைபெற, 2022 ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம், 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் ஒக்டோபர் 13 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

முகநூலில் அதிகம் பார்வையிடப்பட்ட ஐ.சி.சி. இன் வீடியோக்கள்

இதேநேரம், அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவிருந்த மகளிர் உலகக் கிண்ணம் 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மகளிர் உலகக் கிண்ணம் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி தொடக்கம், மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெற முன்னர் ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<