IPL வீரருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று

187
T Natarajan
Photo - BCCI

இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் அணிகளில் ஒன்றான சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான தங்கராசு நடராஜனிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கின்றது.

T. நடராஜனிற்கு அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து அவர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் அவருடன் நெருங்கிப் பழகிய, சன்ரைஸர்ஸ் ஹைதாரபாத் அணியின் ஏனைய வீரரான விஜய் சங்கர் மற்றும் அவ்வணியின் ஆதரவு உறுப்பினர்கள் ஐந்து பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>> இலங்கை வரும் பாகிஸ்தான் A மற்றும் பங்களாதேஷ் U19 அணிகள்

எனினும், ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் வீரர்கள் எவருக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகாத நிலையில், இன்று டுபாயில் நடைபெறவுள்ள இந்திய பிரீமியர் லீக் தொடரின் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகள் இடையிலான 33ஆவது லீக் போட்டி, எந்தவித மாற்றமும் இல்லாமல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<