இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடருக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது எப்படி?

Afghanistan tour of Sri Lanka 2022

1134

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான டிக்கெட்டுகள் எதிர்வரும் 22ம் திகதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளன.

ஐசிசி ஒருநாள் சுபர் லீக் தொடருக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி இலங்கை வருகின்றது.

பயிற்றுவிப்பாளராக மீண்டும் இலங்கை வரும் மிக்கி ஆர்தர்!

குறித்த இந்தப் போட்டித்தொடரின் மூன்று போட்டிகளும் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 25, 27 மற்றும் 30ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டித்தொடருக்கான டிக்கெட்டுகள் 22ம் திகதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளதுடன், அனைத்து நாட்களிலும் இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேநேரம் போட்டி நடைபெறாத தினங்களில் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பலகொல்ல அபிதா மைதானத்தில் அனைத்து நாட்களிலும் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.

போட்டித்தொடருக்கான டிக்கெட்டுகள் 500 ரூபா முதல், 2000, 4000 மற்றும் 5000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<