மெதிவ்ஸின் அணியை வீழ்த்திய திசர பெரேராவின் அணி

2115
Super Four Provincial Limited Over

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (05) நடைபெற்றன. இதில் கண்டி அணியை வீழ்த்திய கொழும்பு அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டதோடு தம்புள்ளை அணியை வீழ்த்தி காலி அணி முதல் வெற்றியை பெற்றது.

கொழும்பு எதிர் கண்டி

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷெஹான் ஜயசூரியவின் சதம் மற்றும் பந்துவீச்சில் லக்ஷான் மதுசங்க விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் அஞ்செலோ மெதிவ்ஸின் கண்டி அணியை திசர பெரேரா தலைமையிலான கொழும்பு அணி 58 ஓட்டங்களால் வீழ்த்தியது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த கொழும்பு அணி 63 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. முதல் போட்டியில் சதம் பெற்ற லஹிரு திரிமான்ன 25 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 2 ஓட்டங்களுடனும் துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.

எனினும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷெஹான் ஜயசூரிய மற்றும் அனுபவ வீரர் சாமர சில்வா 163 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு அணியை வலுப்பெறச் செய்தனர்.

ஜனநாயக முறையில் இலங்கை கிரிக்கெட் தேர்தல் நடைபெறும் – அமைச்சர் பைஸர்

சாமர சில்வா 90 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தபோதும், மறுமுனையில் ஷெஹான் ஜயசூரிய A நிலை போட்டிகளில் தனது 6 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். 100 பந்துகளுக்கு முகம் கொடுத்த அவர் 11 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 110 ஓட்டங்களைப் பெற்றார். கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இலங்கை அணியில் இடம் கிடைக்காதபோதும் 26 வயதான ஷெஹான் ஜயசூரிய உள்ளூர் மட்ட போட்டிகளில் தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இருவரதும் சிறப்பாட்டத்தின் மூலம் கொழும்பு அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 299 ஓட்டங்களை பெற்றது. கண்டி அணி சார்பாக பந்துவீச்சில் அனுபவ சுழல் பந்துவீச்சாளர் ஜீவன் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 300 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சோபித்தபோதும் மத்திய வரிசை ஆட்டம் கண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல 62 பந்துகளில் 60 ஓட்டங்களையும் முதல் வரிசையில் வந்த மஹேல உடவத்த 74 பந்துகளில் 71 ஓட்டங்களையும் பெற கண்டி அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களை தாண்டி இருந்தது.

எனினும் மத்திய வரிசையில் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் 27 ஓட்டங்களுடனும் அடுத்து வந்த வீரர்கள் நின்றுபிடிக்காமல் விக்கெட்டுகளை பறிகொடுக்க கண்டி அணி 241 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணி கடைசி 5 விக்கெட்டுகளையும் வெறுமனே 15 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது துடுப்பாட்டத்தில் சதம் பெற்ற ஷெஹான் ஜயசூரிய தனது சுழல் மூலம் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு லக்‌ஷான் சந்தகன் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

ஸ்கோர் விபரம்









Title





Full Scorecard

Team Kandy

241/10

(43.4 overs)

Result

Team Colombo

299/10

(49.2 overs)

colombo won by 58 runs

Team Kandy’s Innings

Batting R B
N. Dickwella c Dananjaya De Silva b Lakshan Sandakan 60 62
P. Nissanka lbw by Thisara Perera 22 28
M Udawatte b Shehan Jayasuriya 71 74
A Mathews c Lahiru Thirimanne b Shehan Jayasuriya 27 50
Priyamal Perera b Lakshan Sandakan 23 18
J. Mendis c Lakshan Sandakan b Dilruwan Perera 16 18
Ramesh Mendis (runout) Lasith Abeyrathne 2 5
S. Pathirana c Wanindu Hasaranga b Lakshan Sandakan 0 1
I Udana c Lahiru Thirimanne b Lakshan Sandakan 6 2
Pramod Madushan not out 0 3
L. Kumara lbw by Dilruwan Perera 0 1
Extras
14 (LB 6, WD 8)
Total
241/10 (43.4 overs)
Fall of Wickets:
1-68 (P Nissanka, 12.3 ov), 2-90 (N Dickwella, 16.5 ov), 3-189 (AD Mathews, 35.3 ov), 4-189 (ML Udawatte, 35.4 ov), 5-226 (PARP Perera, 40.3 ov), 6-230 (RTM Mendis, 41.5 ov), 7-233 (SS Pathirana, 42.1 ov), 8-239 (I Udana, 42.3 ov), 9-241 (BMAJ Mendis, 43.3 ov), 10-241 (CBRLS Kumara, 43.4 ov)
Bowling O M R W E
Dilruwan Perera 7.4 0 34 2 4.59
T.De.Silva 4 0 26 0 6.50
Shehan Jayasuriya 10 0 55 2 5.50
NLTC Perera 6 0 36 1 6.00
L. Sandakan 10 0 59 4 5.90
D.Munaweera 2 0 6 0 3.00
L. Embuldeniya 4 0 19 0 4.75

Team Colombo’s Innings

Batting R B
D.Munaweera c Priyamal Perera b Isuru Udana 11 18
Shehan Jayasuriya lbw by Jeewan Mendis 110 100
Lahiru Thirimanne (runout) Priyamal Perera 25 22
D.De.Silva (runout) Priyamal Perera 2 4
Chamara Silva lbw by Sachith Pathirana 87 90
NLTC Perera c Mahela Udawatte b Ramesh Mendis 18 15
L. Abeyrathne not out 18 22
T.De.Silva c Niroshan Dickwella b Lahiru Kumara 9 11
Dilruwan Perera b Jeewan Mendis 1 3
L. Sandakan c Lahiru Kumara b Jeewan Mendis 1 8
L. Embuldeniya st Niroshan Dickwella b Jeewan Mendis 1 5
Extras
16 (B 6,LB 2,NB 2,WD 6)
Total
299/10 (49.2 overs)
Fall of Wickets:
1-18 (D Munaweera, 3.2 ov), 2-60 (L Thirimanne, 11.4 ov), 3-63 (D de Silva, 12.5 ov), 4-228 (S Jayasuriya, 35.4 ov), 5-264 (T Perera, 39.6 ov), 6-271 (C Silva, 42.2 ov), 7-284 (T de Silva, 44.6 ov), 8-288 (D Perera, 45.6 ov), 9-292 (L Sandakan, 47.6 ov), 10-299 (L Ambuldeniya, 49.2 ov)
Bowling O M R W E
Pramod Madushan 6 0 38 0 6.33
I Udana 5 0 35 1 7.00
Ramesh Mendis 10 0 64 1 6.40
L. Kumara 9 0 53 1 5.89
S. Pathirana 10 0 48 1 4.80
J. Mendis 7.2 0 38 4 5.28
Priyamal Perera 2 0 15 0 7.50








தம்புள்ளை எதிர் காலி

அணித் தலைவர் உபுல் தரங்க பெற்ற முக்கியமான 86 ஓட்டங்களின் உதவியுடன் தம்புள்ளை அணிக்கு எதிரான போட்டியில் காலி அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வத் லூவிஸ் முறையில் வெற்றி பெற்றது. இதனால் தம்புள்ளை அணி சார்பாக அஷான் பிரியன்ஜன் பெற்ற அபார சதம் வீணானது.

கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மிலிந்த சிறிவர்தன தலைமையிலான தம்புள்ளை அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது. தம்புள்ளை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த போதும் பிரியன்ஜன் பெற்ற சதத்தில் மூலம் அந்த அணியால் சவாலான இலக்கொன்றை நிர்ணயிக்க முடிந்தது.

திரிமான்னவின் அதிரடி சதத்தினால் கொழும்பு அணிக்கு வெற்றி

28 வயதான பிரியன்ஜன், 120 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார். இதனால் தம்புள்ளை அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றது. காலி அணி சார்பாக பந்துவீச்சில் தசுன் ஷானக்க 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த உபுல் தரங்க 79 பந்துகளில் வேகமாக 86 ஓட்டங்களை பெற்று வலுச்சேர்த்தார்.

காலி அணியின் மத்திய வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோதும் அந்த அணியால் வெற்றி இலக்கை நோக்கி முன்னேற முடிந்தது. இந்நிலையில் 46 ஓவர்கள் முடிவில் காலி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது டக்வத் லூவிஸ் முறைப்படி காலி அணி வெற்றி பெற 240 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் அந்த அணி 250 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் நெருக்கடி இன்றி வெற்றியை உறுதி செய்ய முடிந்தது.

இதன் மூலம் காலி அணி தொடரில் முதல் வெற்றியை பெற்றதோடு அந்த அணி தனது முதல் போட்டியில் கண்டி அணியிடம் தோல்வியை சந்தித்தது. மறுபுறம் தம்புள்ளை அணி தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.   

ஸ்கோர் விபரம்









Title





Full Scorecard

Team Dambulla

257/8

(50 overs)

Result

Team Galle

250/8

(46 overs)

galle won by 11 runs (D/L method)

Team Dambulla’s Innings

Batting R B
BKG Mendis c Upul Tharanga b Dasun Shanaka 15 22
Sangeeth Cooray c Malinda Pushpakumara b Suranga Lakmal 0 5
Nishan Madushka c Sadeera Samarawickrama b Nisala Tharaka 16 19
A. Priyanjan c Nisala Tharaka b Suranga Lakmal 101 120
Sachithra Serasinghe c Sadeera Samarawickrama b Dasun Shanaka 0 8
M. Siriwardana c Suranga Lakmal b Malinda Pushpakumara 45 38
L. Madushanka c Chathuranga de Silva b Nisala Tharaka 7 20
Kosala Kulasekara c Sammu Ashan b Dasun Shanaka 30 48
J.Vandersay not out 12 18
MA Aponso not out 1 2
Extras
30 (LB 4 , WD 26)
Total
257/8 (50 overs)
Fall of Wickets:
1-26 (S Cooray, 4.2 ov), 2-30 (K Mendis, 5.1 ov), 3-51 (KNM Fernando, 10.1 ov), 4-52 (S Serasinghe, 11.4 ov), 5-144 (M Siriwardana, 25.5 ov), 6-161 (L Madushanka, 32.5 ov), 7-226 (A Priyanjan, 44.3 ov), 8-252 (K Kulasekara, 49.1 ov)
Bowling O M R W E
Suranga Lakmal 10 1 38 2 3.80
Nisala Tharaka 8 1 47 2 5.88
MD Shanaka 8 1 42 3 5.25
M. Pushpakumara 10 0 42 1 4.20
Sammu Ashan 3 0 26 0 8.67
S. Prasanna 2 0 12 0 6.00
PC de Silva 9 0 46 0 5.11

Team Galle’s Innings

Batting R B
R. Rambukwella c & b Lahiru Madushanka 29 26
WU Tharanga c Nishan Madushka b Asitha Fernando 86 79
S.Samarawickrama c Nishan Madushka b Kosala Kulasekara 5 17
R. Silva c Nishan Madushka b Asitha Fernando 24 41
MD Shanaka c Kusal Mendis b Amila Aponso 26 28
Sammu Ashan b Asitha Fernando 26 30
PC de Silva st Nishan Madushka b Amila Aponso 16 18
S. Prasanna c & b Jeffery Vandersay 17 20
Nisala Tharaka not out 2 5
M. Pushpakumara not out 7 13
Extras
12 (B 4, LB 1, NB 1, WD 6)
Total
250/8 (46 overs)
Fall of Wickets:
1-35 (RLB Rambukwella, 5.6 ov), 2-59 (S Samarawickrama, 11.2 ov), 3-143 (ARS Silva, 26.1 ov), 4-162 (WU Tharanga, 28.6 ov), 5-201 (MD Shanaka, 35.6 ov), 6-203 (S Ashan, 36.6 ov), 7-239 (PC de Silva, 42.6 ov), 8-239 (S Prasanna, 43.1 ov)
Bowling O M R W E
A.Fernando 9 0 63 3 7.00
L. Madushanka 7 1 37 1 5.29
Sachithra Serasinghe 4 0 17 0 4.25
Kosala Kulasekara 6 1 31 1 5.17
MA Aponso 9 1 34 2 3.78
J.Vandersay 10 0 61 1 6.10
M. Siriwardana 1 0 2 0 2.00