தரங்கவின் அதிரடி அரைச் சதத்தால் காலி அணி இறுதிப் போட்டியில்

1015
Super Four Provincial Limited Over - 4

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (14) நடைபெற்றன. இதில் தம்புள்ளை அணியை வீழ்த்திய உபுல் தரங்கவின் காலி அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்ததோடு, கண்டி அணியை வென்ற கொழும்பு இறுதிப்போட்டி வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது.

கொழும் எதிர் கண்டி

செஹான் ஜயசூரிய மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் மீண்டும் ஒருமுறை துடுப்பாட்டத்தில் சோபிக்க, கண்டி அணிக்கு எதிரான தீர்க்கமான போட்டி ஒன்றில் கொழும்பு வீரர்கள் 92 ஓட்டங்களால் வெற்றியீட்டினர்.

அபார சதத்தின் மூலம் காலி அணிக்கு வெற்றி தேடித்தந்த தரங்க

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள்…

எதிர்வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் குழாம் பயிற்சி முகாமில் பங்கேற்றிருப்பதால் கொழும்பு அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் கண்டி அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜீவன் மெண்டிஸ் தலைமையிலான கண்டி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதில் கொழும்பு அணிக்கு திசர பெரேரா தொடர்ந்து தலைமை வகித்து வருகிறார்.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு அணி முதல் விக்கெட்டுக்கு 102 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டது. சிறப்பாக ஆடிவந்த இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணித் தலைவரான கமிந்து மெண்டிஸ் 47 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அவசியமின்றி ரன் அவுட் ஆனார்.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த செஹான் ஜயசூரிய மற்றும் சாமர சில்வா கொழும்பு அணியின் ஓட்டங்களை மேலும் அதிகரித்தனர். சிறப்பாக ஆடிய ஜயசூரிய 78 பந்துகளில் 81 ஓட்டங்களை பெற்றார். அவர் இந்த போட்டித் தொடரில் ஒரு சதம் இரண்டு அரைச்சதங்களுடன் 275 ஓட்டங்களை பெற்று, அதிக ஓட்டங்கள் பெற்றவர்களில் முதலிடத்தில் உள்ளார்.

அதேபோன்று, கொழும்பு அணிக்காக சோபித்து வரும் மற்றொரு வீரரான திரிமான்ன இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதம் பெறுவதை 10 ஓட்டங்களால் தவறவிட்டார். இதன்போது திரிமான்ன மற்றும் சாமர சில்வா ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 95 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது. சாமர சில்வா 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

கொழும்பு அணியின் பின் வரிவை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்கும்போது திரிமான்ன ஒருமுனையில் வேகமாக ஆடி ஓட்டங்களை சேகரித்தார். 69 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 3 பௌண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 90 ஓட்டங்களை குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

இதன்மூலம் கொழும்பு அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை குவித்தது. கண்டி தரப்பு சார்பில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சச்சித் பத்திரன 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய கண்டி அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் ஒருமுறை சோபிக்க தவறினர். ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக்க தொடரில் முதல் முறை இரட்டை ஓட்டங்களை எட்டி 59 ஓட்டங்களை குவித்தார். அதேபோன்று, முதல் வரிசையில் வந்த அனுபவ வீரர் கபுகெதர பெற்ற 44 ஓட்டங்களை தவிர்த்து வேறு எந்த வீரரும் நின்றுபிடித்து ஆடவில்லை.

ஹேரத், லக்மால் ஆகியோர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கை அணியானது அடுத்த மாதம் அங்கே மூன்று…

இதனால் கண்டி அணி 48.3 ஓவர்களில் 217 ஓட்டங்களுக்கே சுருண்டது. சுழல் வீரர் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். போனஸ் புள்ளியையும் பெற்ற கொழும்பு அணி மொத்தம் 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு தம்புள்ளை அணியுடன் கடும் போட்டியில் உள்ளது.

எனினும், இந்த தொடரில் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் கண்டி அணி வரும் மே 20 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.   


காலி எதிர் தம்புள்ளை

ஸ்திரமான துடுப்பாட்டத்தின் மூலம் தம்புள்ளை அணியை 15 ஓட்டங்களால் டக்வர்த் லுவிஸ் முறையில் வென்ற காலி, மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

உபுல் தரங்க தலைமையிலான காலி அணி இந்த தொடரில் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் நான்கில் வென்று மொத்தம் 17 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த தம்புள்ளை 10 புள்ளிகளோடு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற வரும் வியாழக்கிழமை (17) நடைபெறவிருக்கும் கொழும்பு அணியுடனான ஆட்டத்தில் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

கொழும்பு, பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அஷான் பிரியன்ஜன் தலைமையிலான தம்புள்ளை அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் 6 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திலகரத்ன சம்பத் மற்றும் சச்சித்ர செனநாயக்க பகிர்ந்து கொண்ட 100 ஓட்டங்கள் மூலம் அந்த அணி 200 ஓட்டங்களை கடந்தது.

இதில் SSC அணித்தலைவரான சச்சித்ர சேனநாயக்க 60 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றதோடு, திலகரத்ன சதம்பத் 43 ஓட்டங்களை குவித்தார். முதல் வரிசையில் 18 வயதான நிஷான் மதுஷங்க 44 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

இதன்மூலம் தம்புள்ளை அணி 47 ஓவர்களுக்கும் சகல விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றது. இதன்போது தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார மற்றும் தசுன் ஷானக்க தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐக்கிய அரபு இராட்சிய மகளிர் கிரிக்கெட் அணியில் இலங்கை வீராங்கனை

நான்கு வருடங்களுக்கு முன்னர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்த இலங்கை…

சவாலான வெற்றி இலக்கொன்றை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய காலி அணிக்கு அதன் தலைவர் தரங்க ஆரம்பத்தில் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தார். 26 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 7 பௌண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 57 ஓட்டங்களை விளாசினார். இலங்கை டெஸ்ட் குழாமில் இடம்பிடிக்க தவறியிருக்கும் தரங்க இந்த தொடரில் ஒரு சதம் 2 அரைச்சதங்களோடு ஐந்து போட்டிகளில் மொத்தம் 272 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

காலி அணிக்காக ஏனைய முன்வரிசை வீரர்களும் ஸ்திரமாக துடுப்பெடுத்தாடினர். இளம் வீரர் ஷம்மு அஷான் (48*) மற்றும் தசுன் ஷானக்க (38*) இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் போட்டி முடிவுக்கு வந்தது.

இதன்போது காலி அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை பெற்றிருந்தது. இந்த தருணத்தில் அந்த அணி 204 ஓட்டங்களை பெற்றால் மாத்திரம் போதும் என்ற நிலையில் இருந்தது. எனவே, அந்த அணி 218 ஓட்டங்களை பெற்றிருந்தமையினால் 15 ஓட்டங்களால் டக்வர்த் லுவிஸ் முறையில் வெற்றி பெற்றது.

தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளும் எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறும்.  

 கிரிக்கெட் வீடியோக்களைப் பார்வையிட