Home Tamil தம்புள்ள வைகிங்கை வீழ்த்திய ஜப்னா ஸ்டாலியன்ஸ் LPL இறுதிப் போட்டியில்

தம்புள்ள வைகிங்கை வீழ்த்திய ஜப்னா ஸ்டாலியன்ஸ் LPL இறுதிப் போட்டியில்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

252
SLC

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தம்புள்ள வைகிங் அணியினை 37 ஓட்டங்களால் வீழ்த்தி, LPL தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுகின்ற இரண்டாவது அணியாக மாறியிருக்கின்றது.

LPL இறுதிப் போட்டியில் ஆடும் முதல் அணியாக கோல் கிளேடியேட்டர்ஸ்

திங்கட்கிழமை (14) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற, லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் LPL புள்ளி அட்டவணையில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற தம்புள்ள வைகிங் அணியும், மூன்றாம் இடம் பெற்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியும் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் மோதியிருந்தன. 

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ள அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக வழங்கினார். 

இப்போட்டிக்கான இரண்டு அணிகளும் தங்களது குழாம்களில் பாரிய மாற்றங்கள் எதுவுமின்றி களமிறங்கியிருந்தன. 

தம்புள்ள வைகிங் – நிரோஷன் டிக்வெல்ல (WK), உபுல் தரங்க, அஞ்செலோ பெரேரா, சமித் பட்டேல், தசுன் ஷானக (C), சமியுல்லா ஷின்வாரி, ரமேஷ் மெண்டிஸ், கசுன் ராஜித, மலிந்த புஷ்பகுமார, அன்வர் அலி, லஹிரு குமார

ஜப்னா ஸ்டாலியன்ஸ் – அவிஷ்க பெர்னாந்து, ஜொன்சன் சார்ல்ஸ் (WK), சொஹைப் மலிக், திசர பெரேரா (C), வனிந்து ஹசரங்க, சரித் அசலங்க, டுவானே ஒலிவியர், தனஞ்சய டி சில்வா, சுரங்க லக்மால், சத்துரங்க டி சில்வா, உஸ்மான் சின்வாரி

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு ஆரம்ப வீரர்களாக வந்த ஜொன்சன் சார்ல்ஸ் மற்றும் அவிஷ்க பெர்னாந்து ஜோடி மூலம் சிறந்த ஆரம்பம் ஒன்று கிடைத்தது. எனினும், அவிஷ்க, அன்வர் அலியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்து சென்றார். அவிஷ்க பெர்னாந்து ஆட்டமிழக்கும் போது 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Video – ஓட்டமற்ற ஓவர்களை வீசுவது தான் எனது குறிக்கோள்: Wanindu Hasaranga ..!

அவிஷ்கவினை தொடர்ந்து ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக அவ்வணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான சரித் அசலன்க, அணித்தலைவர் திசர பெரேரா மற்றும் சொஹைப் மலிக் ஆகியோர் ஜொலிக்கத் தவறினர். எனினும், ஆரம்ப வீரராக களம் வந்திருந்த ஜொன்சன் சார்ல்ஸ் போராட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து ஜொன்சன் சார்ல்ஸின் துடுப்பாட்ட உதவியோடு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் ஜொன்சன் சார்ல்ஸ் இந்த LPL தொடரில் தன்னுடைய முதல் அரைச் சதத்தினைப் பதிவு செய்து 56 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களை எடுத்திருந்தார். எனினும், இவர் ஓட்டம் எதுவும் பெறாமல் இருந்த வேளையில் அவரது பிடியெடுப்பொன்றை தம்புள்ள வைகிங் வீரர்கள் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தம்புள்ள வைகிங் அணியின் பந்துவீச்சு சார்பாக மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 166 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ள வைகிங் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டி, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 129 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினை தழுவியது. 

நவீன விளையாட்டு (Digital) ஊடகத்துக்கான விருதை வென்ற Thepapare.com

தம்புள்ள வைகிங் அணியின் துடுப்பாட்டம் சார்பில் உபுல் தரங்க 33 ஓட்டங்களுடன் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களைப் பதிவு செய்திருந்தார். 

அதேநேரம், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், தனஞ்சய டி சில்வா, சுரங்க லக்மால், சரித் அசலன்க, சத்துரங்க டி சில்வா மற்றும் டுவான்னே ஒலிவியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரரான ஜொன்சன் சார்ல்ஸ் பெற்றுக் கொண்டார். 

இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் தம்புள்ள வைகிங் அணி, LPL தொடரின் இறுதிப் போட்டியில் எதிர்வரும் புதன்கிழமை (16) கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை எதிர்கொள்கின்றது.  

போட்டியின் சுருக்கம்

Result


Dambulla Aura
128/10 (19.1)

Jaffna Kings
165/9 (20)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Angelo Perera b Anwar Ali 39 26 2 4 150.00
Johnson Charles c Anwar Ali b Lahiru Kumara 76 56 10 1 135.71
Charith Asalanka c Anwar Ali b Malinda Pushpakumara 10 8 0 1 125.00
Thisara Perera c Anwar Ali b Ramesh Mendis 7 3 0 1 233.33
Shoaib Malik st Niroshan Dickwella b Malinda Pushpakumara 1 2 0 0 50.00
Chathuranga de Sliva run out (Malinda Pushpakumara) 6 4 1 0 150.00
Wanindu Hasaranga run out (Kasun Rajitha) 14 15 1 0 93.33
Dhananjaya de Silva run out (Kasun Rajitha) 1 1 0 0 100.00
Suranga Lakmal run out (Ramesh Mendis) 5 6 0 0 83.33
Usman Shinwari not out 0 1 0 0 0.00


Extras 6 (b 0 , lb 0 , nb 1, w 5, pen 0)
Total 165/9 (20 Overs, RR: 8.25)
Did not bat Duanne Olivier,

Bowling O M R W Econ
Lahiru Kumara 4 0 31 1 7.75
Kasun Rajitha 4 0 33 0 8.25
Samit Patel 4 0 28 0 7.00
Malinda Pushpakumara 4 0 24 2 6.00
Anwar Ali 2 0 27 1 13.50
Dasun Shanaka 1 0 13 0 13.00
Ramesh Mendis 1 0 10 1 10.00


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella lbw b Charith Asalanka 29 18 5 0 161.11
Samit Patel c Shoaib Malik b Suranga Lakmal 10 10 2 0 100.00
Angelo Perera c Thisara Perera b Dhananjaya de Silva 5 4 1 0 125.00
Upul Tharanga c Johnson Charles b Wanindu Hasaranga 33 39 5 0 84.62
Dasun Shanaka run out (Usman Shinwari) 5 6 0 0 83.33
Samiullah Shinwari lbw b Wanindu Hasaranga 4 4 1 0 100.00
Anwar Ali run out (Usman Shinwari) 5 9 0 0 55.56
Ramesh Mendis c Usman Shinwari b Duanne Olivier 26 10 4 1 260.00
Malinda Pushpakumara c Thisara Perera b Wanindu Hasaranga 1 2 0 0 50.00
Kasun Rajitha b Chathuranga de Sliva 2 11 0 0 18.18
Lahiru Kumara not out 1 3 0 0 33.33


Extras 7 (b 2 , lb 1 , nb 1, w 3, pen 0)
Total 128/10 (19.1 Overs, RR: 6.68)
Bowling O M R W Econ
Dhananjaya de Silva 4 0 23 1 5.75
Suranga Lakmal 3 0 24 1 8.00
Usman Shinwari 2 0 13 0 6.50
Shoaib Malik 1 0 8 0 8.00
Charith Asalanka 1 0 7 1 7.00
Duanne Olivier 4 0 35 1 8.75
Wanindu Hasaranga 4 1 15 3 3.75
Chathuranga de Sliva 0.1 0 0 1 0.00



முடிவு – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<