அபுதாபி T10 லீக்கில் ஆட்ட நிர்ணய செயற்பாடுகளில் ஈடுபட்டதாக உதவி கிரிக்கெட் பயிற்சியாளரான சன்னி டில்லோனிற்கு கிரிக்கெட் சார்ந்த அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபட சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) ஆறு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகிய டெவோன் கொன்வே
சன்னி டில்லோன் 2021ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக்கில் தான் பயிற்றுவித்த அணிக்காக ஆட்ட நிர்ணய செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் ICC மற்றும் அமீரக கிரிக்கெட் வாரியம் (ECB) ஆகியவற்றின் ஒழுக்க விதிமுறைகளை மூன்று பிரிவுகளில் மீறி நடந்து கொண்டமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதனை அடுத்து ஆறு ஆண்டுகள் தடையினைப் பெற்றிருக்கின்றார்.
அதேநேரம் சன்னி டில்லோனின் தடைக்காலம் 2023ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 23ஆம் திகதியில் இருந்து அமுலாகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் அமீரக கிரிக்கெட் சபை 8 பேரின் மீது அபுதாபி T10 லீக்கில் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியிருந்ததோடு இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சன்னி டில்லோனும் ஒருவர் என்பது சுட்டிகாட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்<<