ஐசிசி அறிமுகப்படுத்தவுள்ள புதிய விதிமுறை!

International Cricket Council

1109
International Cricket Council

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை துரிதப்படுத்தும் நோக்கில் நிறுத்து கடிகாரங்களை (stop clock) பயன்படுத்துவதாற்கான ஒத்திகையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) ஆரம்பிக்கவுள்ளது.

அதன்படி இம்மாதம் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெறவுள்ள ஐசிசியின் முழு அங்கத்துவம் பெற்ற அணிகளுக்கு இடையிலான 59 சர்வதேச ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் நிறுத்து கடிகாரங்கள் ஒத்திகையை ஐசிசி மேற்கொள்ளவுள்ளது.

>>ஜப்பானுக்கு எதிராக இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி இலகு வெற்றி

குறித்த இந்த நிறுத்து கடிகார ஒத்திகை நாளை செவ்வாய்க்கிழமை (12)  மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள முதல் T20i போட்டியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது.

இந்த நிறுத்த கடிகார விதிமுறையானது ஓவர்களுக்கு இடையில் எடுக்கப்படும் நேரத்தினை கட்டுப்படுத்தும் முகமாக ஆரம்பிக்கின்றது. அதன்படி ஒரு ஓவர் முடிந்தவுடன் அடுத்த ஓவரை 60 செக்கன்களுக்குள் வீசுவதற்கு களத்தடுப்பில் ஈடுபடும் அணி தயாராக வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் மூன்றாவது தடவை ஓவரை வீச தவறும் பட்சத்தில் (60 செக்கன்களுக்குள்) எதிரணிக்கு 5 ஓட்டங்கள் மேலதிகமாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<