சிங்கர் கிண்ண சம்பியனாக முடிசூடிய புனித ஜோசப் கல்லூரி

562

ஜெஹான் டேனியலின் அபார துடுப்பாட்டம் மற்றும் துனித் வெல்லாலகே, லக்ஷான் கமகேவின் சகலதுறை ஆட்டம் என்பவற்றின் உதவியால் திருத்துவக் கல்லூரிக்கு எதிராக இன்று நிறைவுக்கு வந்த இறுதிப் போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் வெற்றியுடன் இந்தப் பருவகாலத்திற்கானசிங்கர் கிண்ணமட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் சம்பியனாக முடிசூடியது.

இறுதிப் போட்டியின் முதல் நாளில் புனித ஜோசப் வீரர்கள் ஆதிக்கம்

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு இடம்பெறும் 19 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு ஒன்று (டிவிஷன் – I) பாடசாலை அணிகளுக்கான இரண்டு நாட்கள் கொண்ட …

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு இடம்பெறும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்று (டிவிஷன் – 1) பாடசாலை அணிகளுக்கிடையிலான இரண்டு நாட்கள் கொண்டசிங்கர் கிண்ணகிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான (2017/18) இறுதிப் போட்டி நேற்று (8) கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரிக்கும் கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் இடையில் ஆரம்பமாகியது.

தீர்மானமிக்க இந்த இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.

இதன்படி, முதல் இன்னிங்ஸுக்காக அவ்வணி 82.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 300 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது. இதில், ஜோசப் கல்லூரியின் துடுப்பாட்டம் சார்பாக அவ்வணியின் தலைவரும், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடிய வீரருமான ஜெஹான் டேனியல் 142 பந்துகளுக்கு 86 ஓட்டங்களினை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

திருத்துவ கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் திசரு டில்ஷான் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததுடன், திருத்துவக் கல்லூரியின் அணித்தலைவர் ஹசித்த பொயகொட மற்றும் கவிஷ்க செனாதீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து, போட்டியின் 2ஆவது நாளான இன்றைய தினம் 35 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்த நிலையில், தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த திருத்துவக் கல்லூரி அணியினர், எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவ்வணி சார்பாக அணித்தலைவர் ஹசித்த பொயகொட 39 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஜோசப் கல்லூரியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், வலதுகை மித வேகப்பந்துவீச்சாளர் லக்ஷான் கமகே 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

Embed – https://goo.gl/Hrn2Xo

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் ஆரம்பம் எப்படி இருந்தது?

கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மிகச் சிறந்த வகைப் போட்டிகளான …

இதேநேரம், போட்டியின் ஆட்ட நாயகனாக துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய புனித ஜோசப் கல்லூரி அணியின் தலைவர் ஜெஹான் டேனியல் தெரிவானார்.

இதன்படி, கடந்த ஐந்து மாதங்களாக நாடளாவிய ரீதியில் முன்னணி பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றுவந்த இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான (2017/18) சம்பியனாக கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மகுடம் சூடியது.

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த ஒரு நாள் தொடரை காலி ரிஷ்மண்ட் கல்லூரி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க