இலங்கை கால்பந்தின் தலைவரானார் ஸ்ரீ ரங்கா; ஜஸ்வர் தகுதி நீக்கம்

Sri Lanka Football

701

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FSL) புதிய தலைவராக ஸ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை (14) இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமே ஸ்ரீ ரங்கா புதிய தலைவராக தெரிவாகியுள்ளார்.

குறித்த தேர்தலில் தலைவருக்கான வாக்கெடுப்பில் ஸ்ரீ ரங்கா 27 வாக்குகளைப் பெற, அவருக்கு எதிராக போட்டியிட்ட நாவலபிடிய கால்பந்து லீக்கின் ஜகத் டி சில்வா 24 வாக்குகளைப் பெற்றார்.

எவ்வாறாயினும், தலைவர் பதவிக்கான வேட்பாளராக இருந்த, இலங்கை கால்பந்து சம்மேளத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் அவர்களின் வேட்பாளருக்கான தகுதி இறுதி நேரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சினால் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்…..

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<