SLT அனுசரணையோடு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை சைக்கிளோட்டம்

223
Sri Lanka’s Ultimate Cross-Country Cycle Race
Photo - Dailymirror

நாடு தழுவிய ரீதியில் மிக நீண்ட தூர சைக்கிளோட்டப் போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் மிக நீண்ட தூர சைக்கிள் ஓட்டப் போட்டியாகப் பதிவாகவுள்ள இந்தப் போட்டியானது ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் நடைபெறுகிறது.

இந்தப் போட்டிகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று கொழும்பு சினமண்ட் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் எஸ்.எல்.டி நிறுவன அதிகாரிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சைக்கிளோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜீவன் ஜயசிங்க மற்றும் முன்னாள் சைக்கிளோட்ட சம்பியன்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஜூலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியானது தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இது கொழும்பில் ஆரம்பமாகி மாத்தறை வரை சென்று அங்கிருந்து இரத்தினபுரி வந்தடைந்து, தொடர்ந்து கண்டிக்கு சென்று, கண்டியிலிருந்து அனுராதபுரம், பொலன்னறுவை ஊடாக மட்டக்களப்பில் போட்டி முடிவு காண்கிறது.

இதில் தினமும் வெற்றிபெறும் வீரர்களுக்கான பரிசில்களும் ஒட்டு மொத்த போட்டியின் சம்பியனுக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்