SAG சென்ற இலங்கை வீரர்கள் பதினொருவருக்கு டெங்குக் காய்ச்சல்

196

நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றச் சென்ற இலங்கையின் 13 வீரர்கள் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளளர். இதில் 7 வீரர்களுக்கு இலங்கையில் இருந்த போதே டெங்கு காய்ச்சல் தாக்கியுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கத்மண்டுவில் உள்ள ப்ளு குரொஸ் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற இந்த வீரர்களில் ஒருவர் தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் 5 வீரர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்து  சிகிச்சை பெற்று வருவதாக இலங்கை அணியின் வைத்திய அதிகாரி லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்

இந்த வீரர்களில் பெரும்பாலானோர் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்க வந்த வீரர்கள் ஆவர். இதில் இலங்கை மெய்வல்லுனர் அணியைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனையான நதீஷா ராமநாயக்க, உபுல் நிஷாந்த, யு. குமார மற்றும் மேசைப்பந்து வீராங்கனை பிமந்தி பண்டார ஆகியோர் கடுமையான டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர்

SAG மெய்வல்லுனரில் 28 வருடங்களுக்குப் பிறகு சாதனை படைத்த இலங்கை

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் ……..

மேலும், இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை மெய்வல்லுனர் அணியின் 3 பயிற்சியாளர்களும் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன

இதேநேரம், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகள் நடைபெறுகின்ற பொக்காரா நகரில் இருந்த 3 இலங்கை வீரர்களுக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதுடன், அந்த வீரர்கள் மூவரும் விமானம் மூலம் கத்மண்டுவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கை பெண்கள் கால்ந்தாட்ட அணியைச் சேர்ந்த காயத்ரி நாணயக்கார டெங்குக் காய்ச்சலில் மோசமாக பாதிக்கப்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளார்

இதேவேளை, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 100 மீற்றரில் வெண்கலப் பதக்கத்தையும், பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் வெற்றி கொண்ட இளம் வீராங்கனையான அமாஷா டி சில்வா கடந்த 06ஆம் திகதி இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் அமாஷாவுக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பதாகக் கண்டறியப்பட்டது

இதுதொடர்பில் இலங்கை அணியின் வைத்திய அதிகாரி லால் ஏக்கநாயக்க கருத்து வெளியிடுகையில், “இந்த வீரர்கள் இலங்கையில் இருந்து வரும் போதே டெங்கு நோயினால் பாதிக்கப்ட்டுள்ளனர்

தொடர்ச்சியாக மூன்று தேசிய சாதனைகளை முறியடித்த அகலங்க பீரிஸ்

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு ………

ஆனால் காய்ச்சலுக்காக பரிசோதனை செய்து பார்த்த போதுதான் இது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இந்த வீரர்கள் குறித்து நாங்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து வருகின்றோம். அவர்களது இரத்தத்தை தொடர்ந்து பரிசோதனை செய்கின்றோம். விரைவில் இவர்கள் குணமடைவார்கள்” என தெரிவித்தார்

இந்த நிலையில், டெங்குக் காய்ச்சலுக்கு ஆளாகிய 11 வீரர்கள் நேபாளத்துக்கு வருவதற்கு முன் சுகததாஸ விளையாட்டரங்கின் ஹோட்டலில் தங்கியிந்ததாக வைத்திய அதிகாரி லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். எனவே இதுதொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இதுஇவ்வாறிருக்க, தெற்காசிய விளையாட்டு விழா நாளை (10) நிறைவுக்கு வரவுள்ள நிலையில், டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட வீரர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது

ஏனெனில், நோய்வாய்ப்பட்டுள்ள அந்த வீரர்களை சுமார் நான்கு மணித்தியாலங்கள் விமானப் பயணத்தில் அனுப்பி வைப்பவது சாத்தியம் இல்லை என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே குறித்த வீரர்கள் உரிய தினத்தில் நாட்டுக்கு வருவார்களா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்; நிலையில், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா நிறைவு நாள் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராகச் நேபாளம் சென்றுள்ள விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நேற்றைய தினம் (08) டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இலங்கை வீரர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

SAG பளுதூக்கலில் தங்கம் வென்று சாதனை படைத்தார் திமாலி

தெற்காசிய விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியின் மூன்றாவது நாளான ……..

இதன்போது, “டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு, நேபாள அரசாங்கம் என்பன அனைத்துவிதமான உதவிகளையும் செய்து வருகின்றது. எனவே வீரர்களினது பெற்றோர்கள் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டியதில்லை.

அத்துடன், இந்த வீரர்கள் எவ்வாறு டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார்கள் என்பது தொடர்பில் கண்டுகொள்ள உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்

அதேபோல, வைத்தியசாலையில் உள்ள அனைத்து வீரர்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை வீரர்களுடன் நாடு திரும்புவார்கள்” என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.  

இதேவேளை, இலங்கை வீரர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான அனைத்து செலவுகளையும் விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்றுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க<<