வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 10

331
Scott Styris

1975ஆம் ஆண்டுஸ்கொட்  ஸ்டைரிஸ் பிறப்பு

அவுஸ்ரேலியாவை பிறப்பிடமாகக் கொண்ட நியூஸிலாந்து அணியிக்காக விளையாடிய சகலதுறை வீரர்  ஸ்கொட் ஸ்டைரிஸ்ஸின்  பிறந்த தினமாகும். 5 அடி 10 அங்குலம் உயரம் உடைய வலதுகை துடுப்பாட்ட வீரரான ஸ்கொட் ஸ்டைரிஸ் நியூஸிலாந்து  அணிக்காக 1999ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு  வரையிலான காலப்பகுதியில் 29 டெஸ்ட் , 188 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 09

1949ஆம் ஆண்டுசுனில் கவாஸ்கர் பிறப்பு

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரின்  பிறந்த தினமாகும். 5 அடி 5 அங்குலம் உயரம் உடைய  வலதுகை  துடுப்பாட்ட வீரரான சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்காக 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 125 டெஸ்ட் மற்றும் 108 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தற்போது முன்னணி கிரிக்கட் வர்ணனையாளர்களில் ஒருவரும் ஆவார்.

ஜூலை மாதம் 10ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1874 ஆஸ்டின் டயமண்ட் (இங்கிலாந்து)
  • 1906 ஜேம்ஸ் லெங்ரிஜ்  (இங்கிலாந்து)
  • 1928 ஜெக் நெல் (தென் ஆபிரிக்கா)
  • 1934 முனிர் மாலிக் (பாகிஸ்தான்)
  • 1970 க்லாஸ்ஜான் வான் (நெதர்லாந்து)
  • 1974 கிறிஸ் டிரம் (நியூசிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்