மாகாண ரீதியான மகளிர் டி-20 சம்பியன்ஷிப் போட்டிகள் இன்று ஆரம்பம்

241
Women’s Provincial T20 Championship

மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகளில் தேசிய மட்டத்தில் மற்றும் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி பிரகாசித்த முதல்தர மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பங்குபற்றும் மாகாண இருபதுக்கு இருபது போட்டித்தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

இந்த சுற்றில் நான்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றும் நான்கு அணிகளும், எதிரணிகளுடன் தலா ஒரு முறை போட்டியிடவுள்ளன. இன்று ஆரம்பமாகும் இந்தப் போட்டிகள் எதிர்வரும் 9ஆம் திகதி வரை இடம்பெறும். இந்த போட்டிகளை கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், ப்ளூம் பீல்ட் கிரிக்கெட் கழக மைதானம் மற்றும் மெய்வல்லுனர் கழக மைதானம் என்பவற்றில் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியுடனான தொடரில் இலங்கை மகளிர் அணி படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர் மகளிர் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லங்கா டீ சில்வா ஆகியோர்,போதுமான உள்ளூர் போட்டிகள் நடைபெறாமையே இந்த தோல்விக்கான காரணம்என்று கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்தே இப்போட்டித் தொடருக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் பங்குகொள்ளும் அணி வீரர்களின் விபரங்கள்

(மூலம்இலங்கை கிரிக்கெட் சபை)

North Central – வடமத்திய மாகாணம்
Central – மத்திய மாகாணம்
Western – மேல் மாகாணம்
Southern – தென் மாகாணம்