Home Tamil இலங்கை மகளிருக்கு உலகக் கிண்ணத்தில் மூன்றாவது தொடர் தோல்வி

இலங்கை மகளிருக்கு உலகக் கிண்ணத்தில் மூன்றாவது தொடர் தோல்வி

4
Sri Lanka Women vs South Africa Women - Match 18

இலங்கை – தென்னாபிரிக்க மகளிர் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலை மோதலில், தென்னாபிரிக்கா 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>>அபு தாபி T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்<<

இந்த வெற்றி தென்னாபிரிக்க அணிக்கு இந்த மகளிர் உலகக் கிண்ணத்தில் நான்காவது தொடர் வெற்றியாக மாற, இலங்கை வீராங்கனைகளுக்கு தொடரில் மூன்றாவது அவமான தோல்வியாக உள்ளது.

இலங்கை மகளிர் அணியானது இங்கிலாந்துடன் மோதியிருந்த போட்டியானது, நேற்று (17) ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க வீராங்கனைகள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்திருந்தனர். இலங்கை மகளிர் அணி இந்த தொடரில் மழை தவிர்த்து விளையாடியிருந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை தழுவிய நிலையில், தொடரில் முதல் வெற்றியினை எதிர்பார்த்து களமிறங்கியது.

நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணியானது துடுப்பாட்டத்தினை முன்னெடுத்த நிலையில், பெரும் மழை ஆட்டத்தில் குறுக்கிட்டது. பின்னர் ஆட்டம் நீண்ட இடைவெளியினை அடுத்து அணிக்கு 20 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

20 ஓவர்களுக்கும் முழுமையாக துடுப்பாடிய இலங்கை வீராங்கனைகள் 7 விக்கெட்டுக்களை இழந்து 105 ஓட்டங்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் விஷ்மி குணரட்ன 34 ஓட்டங்கள் பெற்று இலங்கைத் தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீராங்கனையானார்.

>>கேமரூன் கீரினை இந்திய ஒருநாள் தொடரில் இழக்கும் அவுஸ்திரேலியா<<

தென்னாபிரிக்க பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ லபாட்டா 3 விக்கெட்டுக்களையும், மசபாட்டா க்ளாஸ் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக டக்வத் லூயிஸ் முறையில் நிர்ணயம் செய்யப்பட்ட 121 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய தென்னாபிரிக்க வீராங்கனைகள் சிறந்த தொடக்கத்தோடு, 14.5 ஓவர்களில் விக்கெட் எதனையும் இழக்காது போட்டியின் வெற்றி இலக்கினை 125 ஓட்டங்களுடன் அடைந்தனர்.

தென்னாபிரிக்க மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த ஆட்டமிழக்காமல் லோரா வொல்வார்ட் 47 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் பெற, டஸ்மின் ப்ரீட்ஸ் 55 ஓட்டங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகியாக தென்னாபிரிக்க மகளிர் அணித்தலைவியான லோரா வோல்வார்ட் தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

Result
Sri Lanka Women
105/7 (20)
South Africa Women
125/0 (14.5)
Batsmen R B 4s 6s SR
Vishmi Gunaratne c Karabo Meso b Nonkululeko Mlaba 34 33 6 0 103.03
Chamari Athapaththu lbw b Masabata Klaas 11 25 2 0 44.00
Hasini Perera b Masabata Klaas 4 7 1 0 57.14
Harshitha Samarawickrama c Laura Wolvaardt b Nonkululeko Mlaba 13 24 0 0 54.17
Kavisha Dilhari c Laura Wolvaardt b Nadine de Klerk 14 13 1 1 107.69
Nilakshika Silva c Anneke Bosch b Nonkululeko Mlaba 18 17 2 0 105.88
Anushka Sanjeewani run out (Anneke Bosch) 1 1 0 0 100.00
Piumi Wathsala not out 0 0 0 0 0.00
Extras 10 (b 1 , lb 6 , nb 0, w 3, pen 0)
Total 105/7 (20 Overs, RR: 5.25)
Bowling O M R W Econ
Marizanne Kapp 5 1 14 0 2.80
Masabata Klaas 5 0 18 2 3.60
Chloe Tryon 2 0 13 0 6.50
Nadine de Klerk 4 0 23 1 5.75
Nonkululeko Mlaba 4 0 30 3 7.50

Batsmen R B 4s 6s SR
Laura Wolvaardt not out 60 47 8 0 127.66
Tazmin Brits not out 55 42 4 2 130.95
Extras 10 (b 0 , lb 2 , nb 0, w 8, pen 0)
Total 125/0 (14.5 Overs, RR: 8.43)
Bowling O M R W Econ
Sugandika Kumari 2 0 15 0 7.50
Malki Madara 3 0 14 0 4.67
Inoka Ranaweera 3 0 24 0 8.00
Chamari Athapaththu 3 0 22 0 7.33
Kavisha Dilhari 3 0 29 0 9.67
Piumi Wathsala 0.5 0 19 0 38.00

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<