Home Tamil இலங்கை மகளிர் அணியின் வெற்றிக்கனவு மழையினால் பாதிப்பு

இலங்கை மகளிர் அணியின் வெற்றிக்கனவு மழையினால் பாதிப்பு

32
Sri Lanka Women vs New Zealand Women - Match 15 - ICC ODI WC 2025

இலங்கை – நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான உலகக் கிண்ண ஒருநாள் போட்டியானது மழையின் காரணமாக கைவிடப்பட்டிருக்கின்றது.

>>இங்கிலாந்து தொடருக்கான நியூசிலாந்து T20I குழாம் அறிவிப்பு!<<

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (14) ஒழுங்கு செய்யப்பட்ட இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை வீராங்கனைகள் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டனர்.

இலங்கைத் தரப்பில் அதிரடியாக ஆடியிருந்த நிலக்ஷி டி சில்வா வெறும் 28 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காது 55 ஓட்டங்கள் குவித்தார். அதேநேரம் சாமரி அத்தபத்து 53 ஓட்டங்களையும், ஹாசினி பெரேரா 44 ஓட்டங்களையும், விஷ்மி குணரட்ன 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூசிலாந்தின் பந்துவீச்சில் சோபி டிவைன் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ப்ரீ இல்லிங் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் முதல் துடுப்பாட்ட இன்னிங்ஸை அடுத்து போட்டியில் மழையின் தாக்கம் ஏற்பட்டதோடு, நிலைமைகள் சீராகாத காரணத்தினால் ஆட்டமும் கைவிடப்பட்டது. இதனால் இந்த தொடரில் வெற்றிகள் எதனையும் பதிவு செய்யாத இலங்கை வீராங்கனைகளின் முதல் வெற்றிக் கனவு சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியும் வீணாகியது.

அத்துடன் போட்டி கைவிடப்பட்ட காரணத்தினால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதமும் வழங்கப்பட்டது. இலங்கை மகளிர் அணி இந்த உலகக் கிண்ணத்தில் முன்னதாக அவுஸ்திரேலியாவுடன் விளையாடவிருந்த போட்டியும் மழையினால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டியின் சுருக்கம்

Result
Sri Lanka Women
258/6 (50)
New Zealand Women

Batsmen R B 4s 6s SR
Vishmi Gunaratne b Rosemary Mair 42 83 3 0 50.60
Chamari Athapaththu c Maddy Green b Sophie Devine 53 72 7 0 73.61
Hasini Perera c Isabella Gaze b Bree Illing 44 61 6 0 72.13
Harshitha Samarawickrama c Isabella Gaze b Bree Illing 26 31 2 0 83.87
Kavisha Dilhari c Suzie Bates b Sophie Devine 4 4 1 0 100.00
Nilakshika Silva not out 55 28 7 1 196.43
Piumi Wathsala c Bree Illing b Sophie Devine 7 15 1 0 46.67
Anushka Sanjeewani not out 6 6 0 0 100.00
Extras 21 (b 3 , lb 3 , nb 0, w 15, pen 0)
Total 258/6 (50 Overs, RR: 5.16)
Bowling O M R W Econ
Bree Illing 7 0 39 2 5.57
Rosemary Mair 6 0 29 1 4.83
Eden Carson 9 0 44 0 4.89
Jess Kerr 7 0 34 0 4.86
Amelia Kerr 10 0 40 0 4.00
Sophie Devine 9 0 54 3 6.00
Maddy Green 2 0 12 0 6.00

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<