பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், சிட்ரா அமீன் மற்றும் முனீபா அலி ஆகியோர் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டனர்.
>>எனது பயிற்றுவிப்புக்காக நான் மன்னிப்பு கோர மாட்டேன் – ஜஸ்டின் லேங்கர்
சிட்ரா அமீன் சதத்தை பதிவுசெய்து 123 ஓட்டங்களை குவித்ததுடன், முனீபா அலி 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 158 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக பிஸ்மா மரூப் 36 ஓட்டங்களையும், நிடா தார் 10 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற, பாகிஸ்தான் மகளிர் அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 253 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஓசதி ரணசிங்க மற்றும் கவீஷா டில்ஹாரி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை மகளிர் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கியது. இதன்காரணமாக முதல் 4 விக்கெட்டுகளும் 90 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. பின்னர், கவீஷா டில்ஹாரி மற்றும் ஹர்ஷிதா மாதவி ஆகியோர் 5வது விக்கெட்டுக்காக 61 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
எனினும் இவர்கள் இருவரின் ஆட்டமிழப்பின் பின்னர் இலங்கை அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்ததுடன், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. ஹர்ஷிதா மாதவி 41 ஓட்டங்களையும், கவீஷா டில்ஹாரி 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற, இலங்கை அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இலங்கை மகளிர் அணி அணி தங்களுடைய முதல் 2 T20I போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்துள்ளதுடன், மூன்றாவது ஒருநாள் போட்டியில் எதிர்வரும் 5ம் திகதி நடைபெறவுள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Muneeba Ali | c Harshitha Madavi b Oshadi Ranasinghe | 56 | 100 | 3 | 0 | 56.00 |
Sidra Ameen | c Harshitha Madavi b Kavisha Dilhari | 123 | 150 | 11 | 0 | 82.00 |
Bismah Maroof | not out | 36 | 43 | 0 | 0 | 83.72 |
Nida Dar | not out | 10 | 7 | 1 | 0 | 142.86 |
Extras | 28 (b 0 , lb 5 , nb 0, w 23, pen 0) |
Total | 253/2 (50 Overs, RR: 5.06) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Achini Kulasuriya | 9 | 0 | 48 | 0 | 5.33 | |
Oshadi Ranasinghe | 10 | 0 | 44 | 1 | 4.40 | |
Kavisha Dilhari | 10 | 2 | 43 | 1 | 4.30 | |
Inoka Ranaweera | 10 | 0 | 52 | 0 | 5.20 | |
Sachini Nisansala | 4 | 0 | 24 | 0 | 6.00 | |
Nilakshi de Silva | 7 | 0 | 37 | 0 | 5.29 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hasini Perera | c Nida Dar b Fatima Sana | 14 | 19 | 2 | 0 | 73.68 |
Chamari Athapaththu | c Sidra Ameen b Nida Dar | 16 | 34 | 2 | 0 | 47.06 |
Hansima Karunarathne | c Fatima Sana b Omaima Sohail | 27 | 59 | 4 | 0 | 45.76 |
Prasadani Weerakkody | run out (Omaima Sohail) | 20 | 42 | 1 | 0 | 47.62 |
Harshitha Madavi | run out (Sidra Nawaz) | 41 | 48 | 1 | 0 | 85.42 |
Kavisha Dilhari | st Sidra Nawaz b Omaima Sohail | 32 | 35 | 3 | 0 | 91.43 |
Nilakshi de Silva | c Aliya Riaz b Fatima Sana | 17 | 18 | 1 | 0 | 94.44 |
Oshadi Ranasinghe | c Diana Baig b Fatima Sana | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Sachini Nisansala | b Fatima Sana | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Inoka Ranaweera | not out | 2 | 28 | 0 | 0 | 7.14 |
Achini Kulasuriya | not out | 3 | 10 | 0 | 0 | 30.00 |
Extras | 7 (b 0 , lb 1 , nb 1, w 5, pen 0) |
Total | 180/9 (50 Overs, RR: 3.6) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Diana Baig | 7 | 2 | 24 | 0 | 3.43 | |
Fatima Sana | 10 | 3 | 26 | 4 | 2.60 | |
Nida Dar | 7 | 1 | 29 | 1 | 4.14 | |
Sadia Iqbal | 8 | 3 | 30 | 0 | 3.75 | |
Ghulam Fatima | 10 | 1 | 35 | 0 | 3.50 | |
Omaima Sohail | 8 | 0 | 35 | 2 | 4.38 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<