தென் கொரியாவுடன் 10 வீரர்களுடன் போராடிய இலங்கை கால்பந்து அணி

FIFA World Cup 2022

156
AFC

தென் கொரிய அணியிடம் 5-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியுற்ற இலங்கை அணி 2022 கால்பந்து உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசியப் பிராந்திய அணிகளை தெரிவு செய்யும் பூர்வாங்க தகுதிகாண் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளை நிறைவு செய்துள்ளது.

ஏற்கனவே கடந்த 5ஆம் திகதி லெபனான் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி சிறந்த முறையில் விளையாடினாலும் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இந்த நிலையில் இன்று இடம்பெற்ற இந்த தொடரின் தமது இறுதி மோதலில் இலங்கை அணி பிபா தரப்படுத்தலில் 39ஆவது இடத்தில் இருக்கும் தென் கொரியாவை சந்தித்தது. 

நீண்ட நாட்களின் பின்னர் கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்த இலங்கை அணி

லெபனான் அணியுடனான போட்டி இடம்பெற்ற அதே கொயங் அரங்கில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் 8ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை கொரிய முன்கள வீரர் கோலுக்குள் செலுத்த முன்வருகையில் வேகமாக செயற்பட்ட சுஜான் பந்தை அங்கிருந்து வெளியேற்றினார். 

தொடர்ந்து 15ஆவது நிமிடத்தில் இலங்கை பின்கள வீரர்கள் விட்ட தவறினால் தென் கொரிய அணியின் தலைவர் கிம் சின்வூக் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார். 

மீண்டும், அடுத்த 7 நிமிடங்களுக்குள் சொங் மின்க்யு வழங்கிய பந்துப் பரிமாற்றத்தினால் Lee Donggyeong தென் கொரிய அணிக்கான அடுத்த கோலையும் பெற்றார்.  

போட்டியின் 42ஆவது நிமிடத்தில் இலங்கையின் பெனால்டி எல்லையில் வைத்து ஜுட் சுபன் மூலம் தென் கொரிய வீரர் HWANG HEECHAN முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டதாக கூறி நடுவர் தென் கொரிய அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். இதன்போது, கிம் சின்வூக் தனது அணிக்கான அடுத்த கோலைப் பதிவு செய்தார். 

இதனால், முதல் பாதி நிறைவில் தென் கொரிய அணி 3 கோல்களினால் முன்னிலை பெற்றது.  எனினும், இலங்கை வீரர்கள் பலம் மிக்க தென் கொரிய அணிக்கு எதிராக முதல் பாதியில் தமக்கான முதல் கோலுக்கான முயற்சிகளையும் மேற்கொண்டனர். 

முதல் பாதி: இலங்கை 3 – 0 தென் கொரியா  

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 6 நிமிடங்களில் தென் கொரிய அணிக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது உள் அனுப்பப்பட்ட பந்தை இலங்கை வீரர் மாவின் ஹமில்டன் ஹெடர் மூலம் தடுத்தார். எனினும், அந்தப் பந்தைப் பெற்ற HWANG HEECHAN அதனை வேகமாக கோலுக்குள் செலுத்தி நான்காவது கோலைப் பெற்றார்.  

இலங்கையில் கால்பந்து முன்னேற இன்னும் 4, 5 வருடங்கள் தேவை – அமிர்

அடுத்த 4 நிமிடங்களுக்குள் ஆசிகுர் ரஹ்மான் போட்டியின் இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்று சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனவே, இலங்கை அணிக்கு 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அதன் பின்னர் இலங்கை வீரர்கள் முழுமையாக தமது எல்லையில் இருந்து தடுப்பாட்டத்தையே மேற்கொண்டனர். 

ஆட்டத்தின் 72ஆவது நிமிட்டத்தில் தென் கொரிய அணிக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது உள்ளனுப்பிய பந்து வேகமாக கோலுக்குள் ஹெடர் செய்யப்பட, சுஜான் அதனை தடுத்து திசை திருப்பினார். 

எனினும், அடுத்த 5 நிமிடங்களில், மைதானத்திற்கு மாற்று வீரராக வந்த சங்பின் மூலம் தென் கொரிய அணி தமக்கான ஐந்தாவது கோலையும் பெற்றது. 

பின்னர், இலங்கை வீரர்கள் ஓரிரு வாய்ப்புக்களை கோலுக்கான முயற்சியாக மேற்கொண்டாலும் அவை வெற்றியளிக்கவில்லை. எனவே, ஆட்ட நிறைவில் 5-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை அணி தோல்வி கண்டது. 

இலங்கை கால்பந்து அணியில் இடம்பிடித்த தமிழ் பேசும் வீரர்கள்…!  

எற்கனவே தென் கொரியாவுடன் இடம்பெற்ற தமது முன்னயை போட்டியில் இலங்கை அணி 8-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த தொடரில் இலங்கை அணி எந்தவொரு போட்டியையும் வென்றதில்லை. எனினும், இலங்கை வீரர்கள் நீண்ட ஒரு இடைவெளியின் பின்னர் நல்ல முன்னேற்றம் கண்டு தமது இறுதி இரண்டு போட்டிகளையும் விளையாடியமை இலங்கை ரசிகர்களுக்கு பெரிய ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முழு நேரம்: இலங்கை 5 – 0 தென் கொரியா 

கோல் பெற்றவர்கள் 

  • தென் கொரியா – கிம் சின்வூக் 15, 43’(P), Lee Donggyeong 22’, HWANG HEECHAN , ஜியொங் சங்பின் 77

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<