எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஹொங்கொங் கிங்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்ட ரக்பி செவன்ஸ் போட்டித் தொடரை எதிர்கொள்வதற்காக நடப்புச் சம்பியனான இலங்கை ரக்பி அணி அங்கு பயணமாகவுள்ளது.

வரலாற்று வெற்றியை தவறவிட்ட இலங்கை ரக்பி அணி

மேற்கிந்திய தீவுகளின் பஹாமாஸ் தீவுகளில் தற்போது நடைபெற்று வருகின்ற 6ஆவது..

இந்த தொடருக்கு புனித தோமியர் கல்லூரி அணியின் முன்னாள்  தலைவர் மற்றும் wing-three quarter நிலை வீரரான நவீன் ஹெனகன்கானமகே அணித் தலைவராக செயல்படவுள்ள அதேநேரம் அனுபவம் வாய்ந்த ரக்பி வீரர்கள் பலரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மற்றும் ரக்பி கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் வீரர்களும் அந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளதால் அனுபவம் வாய்ந்த வீரர்களின் வழிகாட்டல் இளம் மற்றும் அனுபவமற்ற இளம் வீரர்களுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.

அதேநேரம், பாடசாலை பருவகால ரக்பி போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த சதுர செனவிரத்ன, சமோத் பெர்னாண்டோ மற்றும் அவிஷ்க ஆகியோருடன் புனித பேதுரு கல்லூரியை சேர்ந்த தீக்ஷண தசநாயக்க மற்றும் புனித அந்தோனியார் கல்லூரி அணித் தலைவர் தினுக் அமரசிங்க உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்களும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கடற்படை விளையாட்டுக் கழக வீரர் லஹிரு ஹேரத், 2016ஆம் ஆண்டு சுற்றுப் பயணம் செய்தவரும் 2016/17ஆம் ஆண்டுக்கான டயலொக் கழக மட்ட ரக்பி லீக் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியிருந்தவருமான தனுஜ மதுரங்க ஆகியோரும் அணிக்கான இடத்தை தக்கவைத்துள்ளனர்.

அது போன்றே, ஹெவலொக் அணியை சேர்ந்த ரமேஷ் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் கழக பைவ் எய்ட் வீரரான சந்தேஷ் ஜெயவிக்கரம, லொக் போர்வர்ட் வாஜீத் பௌமி ஆகியோரும் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2016ஆம் ஆண்டு செவன்ஸ் போட்டித் தொடரில் இலங்கை அணியை சம்பியன் பட்டத்தை கைப்பற்றுவற்கு வெற்றிகரமாக வழிநடாத்திய பயிற்றுவிப்பாளர் சுதத் சம்பத் மீண்டுமொருமுறை இவ்விளம் வீரர்களை வெற்றிப்பாதைக்கு வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலக மெய்வல்லுனர் தொடருக்கு இலங்கையிலிருந்து 4 பேர் பங்கேற்பு

லண்டனில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை…

தெரிவு செய்யப்பட்டுள்ள அணி

நவீன் ஹெனகன்கானமகே (அணித் தலைவர்) – புனித தோமியர் கல்லூரி
சுபுன் தில்ஷன் (துணைத் தலைவர்) – (சயன்ஸ் கல்லூரி / கடற்படை வி.க)
சமோத் பெர்னாண்டோ – இசிபதன கல்லூரி
ஆதிசேர வீரதுங்க – (இசிபதன கல்லூரி / கடற்படை வி.க)
றணிந்து பத்மசங்க – (இசிபதன கல்லூரி)
தனுஜ மதுரங்க – (சயன்ஸ் கல்லூரி / கடற்படை வி.க)
வாஜித் பௌமி – (ஸாஹிரா கல்லூரி / பொலிஸ் வி.க )
சந்தேஷ் ஜெயவிக்ரம – (புனித பேதுரு கல்லூரி / பொலிஸ் வி.க)
தீக்ஷண தசநாயக்க – (புனித பேதுரு கல்லூரி)
சதுர செனவிரத்ன – (புனித ஜோசப் கல்லூரி)
சுரங்க பண்டார – (பொலிஸ் வி.க)
லஹிரு ஹேரத் – (CWW கன்னங்கரா கல்லூரி / கடற்படை வி.க)
ரமேஷ் பெர்னாண்டோ – (புனித பேதுரு கல்லூரி /ஹெவலொக்ஸ் வி.க)
அவிஷ்க லீ – (வெஸ்லி கல்லூரி)
தினுக் அமர்சிங்க (புனித அந்தோனியார் கல்லூரி)

கடந்த ஆண்டு போட்டிகளுக்குப் பின்னரான தரவரிசை

1) இலங்கை
2) தென் கொரியா
3) ஹொங்கொங்
4) மலேசியா
5) சைனீஸ் தாய்ப்பே
6) தாய்லாந்து
7) சிங்கப்பூர்
8) சீனா
9) பிலிப்பைன்ஸ்
10) உஸ்பெகிஸ்தான்

2017ஆம் ஆண்டுக்கான 20  வயதுக்குட்பட்ட ஆசிய  ரக்பி போட்டிகள்

–A பிரிவு – இலங்கை, மலேசியா, சைனீஸ் தாய்ப்பே, சீனா, பிலிப்பைன்ஸ்
–B பிரிவு – தென் கொரியா, ஹொங்கொங், தாய்லாந்து, சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான்

இந்த போட்டிகள் அனைத்தும் இடம்பெரும் ஆகஸ்ட் மாதம், 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் ThePapare.com இணையத்தளம் ஹொங்கொங் நகரில் இருந்து போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.