2026ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 23ஆவது லீக் போட்டியில், இலங்கை இளையோர் அணியை 9 விக்கெட்டுகளால் மிக இலகுவாக வீழ்த்திய அவுஸ்திரேலிய இளையோர் அணி, தொடரில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
நமீபியாவின் விண்ட்ஹோக் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய இளம் அணியானது, முதலில் பந்துவீச்சினை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி, அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் வில்லியம் பைரமின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இலங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 58 ஓட்டங்களுக்குடன் சுருண்டது. இலங்கை அணி சார்பில் சாமிக ஹீனட்டிகல அதிகபட்சமாக 14 ஓட்டங்களை எடுக்க, ஏனைய வீரர்களில் ஒருவர் மட்டுமே ஈரிலக்க (கவிஜ கமகே 10) ஓட்டங்களைப் பெற்றார்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய வில்லியம் பைரம் 14 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதேவேளை சார்லஸ் லச்மண்ட் மற்றும் கேசி பார்டன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
பின்னர் 59 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய இளையோர் அணியானது 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 62 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவன் ஹோகன் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும், நிதேஷ் சாமுவேல் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் ரசித் நிம்சார ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி குழு A இல் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், இலங்கை அணி இந்தத் தொடரில் தனது முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
எனினும் இரண்டு அணிகளும் தங்களது குழுக்களில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
Result
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Dimantha Mahavithana | c Oliver Peake b Charles Lachmund | 0 | 10 | 0 | 0 | 0.00 |
| Viran Chamuditha | lbw b Charles Lachmund | 1 | 7 | 0 | 0 | 14.29 |
| Dulnith Sigera | c Jayden Draper b Will Byrom | 1 | 3 | 0 | 0 | 33.33 |
| Vimath Dinsara | c Oliver Peake b Will Byrom | 7 | 10 | 1 | 0 | 70.00 |
| Kavija Gamage | c Jayden Draper b Will Byrom | 10 | 11 | 1 | 0 | 90.91 |
| Chamika Heenatigala | c Alex Lee Young b Hayden Schiller | 14 | 21 | 1 | 0 | 66.67 |
| Aadham Hilmy | c Alex Lee Young b Will Byrom | 1 | 5 | 0 | 0 | 20.00 |
| Sethmika Seneviratne | b Kasey Barton | 5 | 10 | 1 | 0 | 50.00 |
| Rasith Nimsara | c Oliver Peake b Kasey Barton | 6 | 14 | 0 | 0 | 42.86 |
| Vigneshwaran Akash | not out | 1 | 9 | 0 | 0 | 11.11 |
| Kugathas Mathulan | c Steven Hogan b Will Byrom | 6 | 13 | 1 | 0 | 46.15 |
| Extras | 6 (b 0 , lb 1 , nb 0, w 5, pen 0) |
| Total | 58/10 (18.5 Overs, RR: 3.08) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Charles Lachmund | 5 | 0 | 19 | 2 | 3.80 | |
| Will Byrom | 6.5 | 0 | 14 | 5 | 2.15 | |
| Hayden Schiller | 3 | 0 | 11 | 1 | 3.67 | |
| Kasey Barton | 4 | 0 | 13 | 2 | 3.25 | |
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Will Malajczuk | b Rasith Nimsara | 4 | 5 | 1 | 0 | 80.00 |
| Nitesh Samuel | not out | 19 | 40 | 0 | 0 | 47.50 |
| Steven Hogan | not out | 28 | 27 | 3 | 0 | 103.70 |
| Extras | 11 (b 1 , lb 1 , nb 0, w 9, pen 0) |
| Total | 62/1 (12 Overs, RR: 5.17) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Rasith Nimsara | 3 | 0 | 20 | 1 | 6.67 | |
| Kugathas Mathulan | 3 | 0 | 14 | 0 | 4.67 | |
| Viran Chamuditha | 3 | 0 | 6 | 0 | 2.00 | |
| Vigneshwaran Akash | 2 | 0 | 14 | 0 | 7.00 | |
| Kavija Gamage | 1 | 0 | 6 | 0 | 6.00 | |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















