சுபனின் அற்புத கோலினால் நேபாலை சமப்படுத்திய இலங்கை

117
All Nepal Football Association

தெற்காசிய விளையாட்டு விழாவில், போட்டியை நடத்தும் நேபாலுக்கு எதிராக இறுதி நிமிடங்களில் பெற்ற அதிரடி கோலினால், இலங்கை அணி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவு செய்தது. 

இலங்கை அணி மாலைத்தீவுக்கு எதிரான முதல் மோதலை கோல்கள் ஏதும் இன்றி சமன் செய்த அதேவேளை, நேபாள வீரர்கள் தமது முதல் போட்டியில் பூட்டான் அணியை 4-0 என வெற்றி கொண்டனர். 

SAG 2019 கால்பந்து: மாலைத்தீவை சமன் செய்தது இலங்கை

தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) இலங்கை கால்பந்து அணி, தாம் பங்கு…

இலங்கை அணி முதல் மோதலில் மாலைத்தீவுக்கு எதிராக விளையாடிய முதல் பதினொருவரில் இருந்து ஒரு மாற்றத்தை மேற்கொண்டிருந்தது. குறித்த போட்டியில் உபாதைக்குள்ளாகிய அமான் பைசருக்குப் பதிலாக இந்த மோதலில் ஷமோத் டில்ஷான் ஆட்டத்தை ஆரம்பித்தார். 

ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் நேபால் வீரர் அபிஷேக் ரிஜால் கோலுக்குள் பந்தை கொண்டுவரும்பொழுது சுஜான் பெரேரா தடுத்தார். மீண்டும் அவரின் கைகளில் இருந்து நழுவிய பந்தை ரெஜின் சொப்பா கோல் நோக்கி உதைய, பந்து கம்பங்களை விட்டு உயர்ந்து சென்றது. 

20 நிமிடங்களில் எதிரணி வீரர்கள் மத்திய களத்தில் இருந்து பெற்ற வேகமான உதையையும் சுஜான் தடுத்தார். 

போட்டியின் 34ஆவது நிமிடத்தில் இலங்கை பின்கள வீரர் டக்சன் பியுஸ்லஸ் தமது பெனால்டி எல்லைக்குள் வைத்து எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் தாக்கியமையினால், நேபாள  வீரர்களுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்தி அணித் தலைவர் சுஜால் ஷ்ரேஷ்ட்ரா போட்டியின் முதல் கோலைப் பெற்றார். 

இலங்கை வீரர்கள் தமக்கிடையிலான பந்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வதில் அதிக தவறுகளை விட்டனர். இதன் பலனாக எதிரணியின் கோல் வாய்ப்புக்களை தடுக்கும் பணியையே இலங்கை வீரர்களுக்கு மேற்கொள்ள நேரிட்டது. 

முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது டக்சன் கோல் நோக்கி உதைந்த பந்தை நேபாள கோல் காப்பாளர் கோலுக்கு அண்மையில் இருந்து தடுத்தார். 

முதல் பாதி: இலங்கை 0 – 1 நேபால்  

இரண்டாம் பாதி ஆரம்பமாகியது முதல் இலங்கை வீரர்கள் தமது ஆட்டத்தில் வேகத்தை அதிகரித்தனர். எனினும் இந்தப் பாதியில் இரு அணி வீரர்களும் முட்ட மோதி விளையாடினர். 

போட்டியின் 54ஆவது நிமிடத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது கோல் திசைக்கு உதைந்த பந்தை டக்சன் கோல் நோக்கி ஹெடர் செய்ய, நேபால் கோல் காப்பாளர் பிகேஷ் குது அதனை சிறந்த முறையில் தடுத்தார். 

65ஆவது நிமிடத்தில் மொஹமட் ஆகிப் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்து பம்கங்களுக்கு  மேலால் சென்றது. அணித் தலைவர் பசால் வழங்கிய பந்தை ஷமோத் டில்ஷானுக்கு கோலாக மாற்ற முடியவில்லை.

பலோன் டீ ஓர் விருதை ஆறாவது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி

கால்பந்தின் மிக உயரிய விருதான பலோன்-டீ-ஓர் (Ballon d’or) விருது வழங்கும் நிகழ்ச்சி…

83ஆவது நிமிடத்தில் நேபால் அணியினருக்கு கிடைத்த கோணர் உதையின்போது கிடைத்த சிறந்த கோல் வாய்ப்பை அனன்டா தமங் தவறவிட்டார். 

அதன் பின்னர், இரு அணி வீரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலின் முடிவில் சமோத் டில்ஷான் மஞ்சள் அட்டை பெற்றார். 

போட்டியின் 90 நிமிடங்கள் கடந்த நிலையில் இலங்கை வீரர்களுக்கு மத்திய களத்தில் கிடைத்த ப்ரீ கிக்கினை ஜூட் சுபன் பெற்றார். எதிரணியின் தடுப்புக்களுக்கு மத்தியில் கம்பத்தின் வலது பக்கத்தினால் உயர்த்தி மிக வேகமாக உதைந்த பந்து கம்பங்களுக்குள் செல்ல, போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. 

இறுதி நிமிட கோலினால் போட்டியை சமன் செய்த இலங்கை அணி, இரண்டு சமநிலையான முடிவுகளுடன் அடுத்த போட்டியில் வியாழக்கிழமை பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது. 

முழு நேரம்: இலங்கை 1 – 1 நேபால்  

கோல் பெற்றவர்கள் 

நேபால் – சுஜால் ஷ்ரேஷ்ட்ரா 37’

இலங்கை – ஜூட் சுபன் 90+1’ 

மஞ்சள் அட்டை

நேபால் – அபிஷேக் ரிஜால் 54’ 

இலங்கை – டக்சன் பியூஸ்லஸ் 45+8’, தனன்ஜய லக்ஷான் 78’, ஷமோத் டில்ஷான் 88’  

>>SAG செய்திகளைப் படிக்க<<