முஸ்தபிசுர் ரஹ்மானிற்கு சிறு அவகாசம் வழங்கும் பங்களாதேஷ் கிரிக்கெட்

96
Mustafizur Rahman

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் மே மாதம் 01ஆம் திகதி வரை இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் ஆட முடியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  

>> உபாதை காரணமாக வெளியேறும் சிகர் தவான்!

மே மாத ஆரம்பத்தில் ஜிம்பாப்வே-பங்களாதேஷ் அணிகள் பங்கெடுக்கும் T20 தொடர் நடைபெறுகின்றது. இதனால் பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் அந்த நாட்டு கிரிக்கெட் சபை மூலம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை IPL போட்டிகளில் ஆட ஆட்சேபனையின்றிய சான்றிதழை (NOC) பெற்றிருந்தார். ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர் அவர் ஜிம்பாப்வே T20 தொடருக்காக பங்களாதேஷ் திரும்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது 

விடயங்கள் இவ்வாறிருக்க மே மாதம் 01ஆம் திகதி முஸ்தபிசுர் ரஹ்மானின் IPL அணியான சென்னை சுப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதும் போட்டி நடைபெறுகின்றது. எனவே இந்தப் போட்டி வரை தற்போது முஸ்தபிசுர் ரஹ்மானிற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் மூலம் வழங்கப்பட்ட ஆட்சேபனையின்றிய சான்றிதழுக்குரிய காலப்பகுதி அதிகரிக்கப்பட்டிருக்கின்றது 

ஆட்சேபனையின்றிய சான்றிதழ் திகதி தற்போது அதிகரிக்கப்பட்டிருப்பதன் காரணமாக முஸ்தபிசுர் ரஹ்மான், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் மே மாதம் 01ஆம் திகதியில் விளையாடவிருக்கும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார். அத்துடன் சென்னைபஞ்சாப் போட்டியினை அடுத்து முஸ்தபிசுர் ரஹ்மான் நாடு திரும்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. முஸ்தபிசுர் ரஹ்மான் இம்முறை IPL தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக 5 போட்டிகளில் ஆடி 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும் 

அதேநேரம் பங்களாதேஷ்ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் மே மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதோடு, T20I உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக பங்களாதேஷ் அமெரிக்க அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<