முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் ஏமாற்றிய இலங்கை

196
Sri Lanka vs West Indies
ICC

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இலங்கை அணி வெறும் 169 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. போட்டியில் இலங்கை அணிசார்பாக பெதும் நிசங்க டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொண்டதுடன், தென்னாபிரிக்க தொடரில் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த  தனன்ஜய டி சில்வா மீண்டும் அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.

இலங்கையுடனான ஒருநாள் தொடரில் இணையும் சகிப் அல் ஹசன்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. போட்டியில் இலங்கை அணிசார்பாக பெதும் நிசங்க டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொண்டதுடன், தென்னாபிரிக்க தொடரில் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த  தனன்ஜய டி சில்வா மீண்டும் அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், பெதும் நிசங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, துஸ்மந்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ

மேற்கிந்திய தீவுகள் அணி

க்ரைக் ப்ராத்வைட் (தலைவர்), ஜோன் கெம்பல், க்ரூமா பொன்னர், கெயல் மேயர், ஜெர்மைன் ப்ளெக்வூட், ஜொசுவா டி சில்வா, ஜேசன் ஹோல்டர், ரகீம் கொன்வல், அல்ஷாரி ஜோசப், கெமார் ரோச், செனொன் கேப்ரியல்

இலங்கை அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸை பொருத்தவரை, விக்கெட்டுகள் சீரான இடைவெளிகளில் வீழ்த்தப்பட்ட நிலையில், இலங்கை அணியால் குறிப்பிடத்தக்களவான ஓட்ட எண்ணிக்கையை பெறமுடியவில்லை.

இலங்கை அணியை பொருத்தவரை லஹிரு திரிமான்ன, ஏனைய துடுப்பாட்ட வீரர்களிலிருந்து தனித்துநின்று 70 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்ட நிலையில், ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் நிரோஷன் டிக்வெல்ல 32 ஓட்டங்களையும், பெதும் நிசங்க 13 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

குறித்த இந்த நான்கு வீரர்களை தவிர ஏனைய எந்தவொரு வீரரும் இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக்கையை பெறமுடியாமல் பெவிலியன் திரும்பியிருந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகள் பிரதியை கைப்பற்றியதுடன், கெமார் ரோச் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, ஆட்டநேர நிறைவில் விக்கெட்டிழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்றறுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<