உபாதை காரணமாக வெளியேறும் சிகர் தவான்!

Indian Premier League 2024

68

IPL தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் சிகர் தவான் தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

உபாதை காரணமாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியிருந்த சிகர் தவான், குறைந்தது 7 நாட்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலகு வெற்றி

எனவே அடுத்து வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சிகர் தவான் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அணியின் தலைவராக செம் கரன் செயற்பட்டு வருகின்றார். கடந்த ஆண்டு சிகர் தவான் விளையாடாத போட்டிகளிலும் செம் கரன் தலைவராக செயற்பட்டிருந்தார். 

ஜிதேஷ் சர்மா உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் ஆரம்பத்தில் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும் அவர் உப தலைவராக நியமிக்கப்படவில்லை. தலைவர்களுக்கான சந்திப்புகள் மற்றும் கருத்தரங்குகளில் மாத்திரம் தலைவர் சார்பாக  அவர் பங்கேற்றார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<