மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் T20i போட்டி பல திருப்பங்களை ஏற்படுத்தியிருந்த போதும், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது.
போட்டியின் நாண சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. அதன்படி, இலங்கை அணியின் பெதும் நிஸ்ஸங்க மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் சர்வதேச அறிமுகத்தை பெற்றதுடன், மேற்கிந்திய தீவுகள் அணியில் கெவின் சென்கிலையர் அறிமுகத்தை பெற்றார்.
இலங்கை அணி
நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, பெதும் நிஸ்ஸங்க, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), அஷேன் பண்டார, திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, அகில தனன்ஜய, துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப்
மேற்கிந்திய தீவுகள் அணி
லெண்டல் சிம்மன்ஸ், எவின் லிவிஸ், க்ரிஸ் கெயில், நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (தலைவர்), ஜேசன் ஹோல்டர், பெபியன் எலன், டுவைன் பிராவோ, கெவின் சென்கிலையர், ஒபெட் மெக்கோஸ், பிடெல் எட்வர்ட்ஸ்
>> பெதும் நிஸ்ஸங்கவின் திறமையைக்கண்டு வியக்கும் மிக்கி ஆர்தர்!
மேற்கிந்திய தீவுகள் அணியின் பணிப்பின்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக விட்டுக்கொடுக்க தவிறனாலும், குறைந்த ஓட்ட வேகத்துடன் துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க மாத்திரம் 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
பின்னர், இணைந்த அறிமுக வீரர் பெதும் நிஸ்ஸங்க சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். இவரது ஓட்டங்கள் பெறும் வேகம் குறைவாக இருந்த போதும், துடுப்பாட்ட முறை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மறுபக்கம் 29 பந்துகள் துடுப்பெடுத்தாடிய நிரோஷன் டிக்வெல்ல ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பெதும் நிஸ்ஸங்க 34 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில், அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் உட்பட எந்தவொரு வீரரும் அதிகமான ஓட்டங்களையோ அல்லது வேகமாக ஓட்டங்களையோ குவிக்கத் தவறினர்.
எனவே, இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 131 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. பின்வரிசை வீரர்களின் அறிமுக வீரர் அஷேன் பண்டார 6 பந்துகளில் 10 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஒபெட் மெக்கோய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஏனைய பந்துவீச்சாளர்கள் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி அகில தனன்ஜயவின் ஹெட்ரிக் விக்கெட்டுகளை தாண்டி, தங்களுக்கே உரித்தான அதிரடி துடுப்பாட்டத்துடனும், கீரன் பொல்லார்டின் 6 பந்துகளில் பெறப்பட்ட ஆறு சிக்ஸர்கள் ஊடாகவும் 13.1 ஓவர்களில் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எவின் லிவிஸ் மற்றும் லெண்டல் சிம்மன்ஸ் ஆகியோர் அதிரடி ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். வெறும் 3.1 ஓவர்களில் 50 ஓட்டங்களை கடந்த போதும், அகில தனன்ஜய தன்னுடைய இரண்டாவது ஓவரில் எவின் லிவிஸ், க்ரிஸ் கெயில் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி, T20i போட்டிகளில் தன்னுடைய முதலாவது ஹெட்ரிக்கை கைப்பற்றினார்.
தொடர்ந்து அகில தனன்ஜய வீசிய அவருடைய மூன்றாவது ஓவரில், கீரன் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி, இந்திய அணியின் யுவராஜ் சிங்கிற்கு (2007 எதிர் இங்கிலாந்து) அடுத்தப்படியாக T20i போட்டிகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய சாதனையை படைத்தார்.
>> பெப்ரவரி மாத சிறந்த வீரர் விருதுக்கு மூவர் பரிந்துரை
எனினும், வனிந்து ஹசரங்க வீசிய அடுத்த ஓவரில் 38 ஓட்டங்களை பெற்றிருந்த பொல்லார்ட் ஆட்டமிழந்ததுடன், பெபியன் எலன் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து ஜேசன் ஹோல்டர் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோரின் பிடியெடுப்பு வாய்ப்புகள் அஷேன் பண்டார மற்றும் அகில தனன்ஜய ஆகியோரால் தவறவிடப்பட, மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியிலக்கை அடைந்தது.
ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் அகில தனன்ஜய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அகில தனன்ஜய தன்னுடைய 4 ஓவர்களில் 62 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட T20i தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது போட்டி நாளை மறுதினம் (06) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[insert_php] $contents = file_get_contents(“http://stats.thepapare.com/cricket/embed/match_result/sri-lanka-vs-west-indies-1st-t20i”); echo $contents;[/insert_php]
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<