தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
போட்டியின் முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த தென்னாபிரிக்கா அணி தெம்பா பௌவுமாவின் 70 ஓட்டங்களின் உதவியுடன் 191 ஓட்டங்களை பெற்றக்கொண்டது. பந்துவீச்சில் லஹிரு குமார மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்க்க, பிரபாத் ஜயசூரிய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
>>ஓருநாள் தொடரினை கைப்பற்றிய இலங்கை 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி
இலங்கை அணியின் பந்துவீச்சினை பொருத்தவரை சிறந்த முறையில் அமைந்திருந்த போதும், இலங்கை அணியின் துடுப்பாட்டம் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. வெறும் 13.5 ஓவர்கள் மாத்திரம் (ஒரு மணித்தியாலயம் 5 நிமிடங்கள்) துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை பொருத்தவரை பாகிஸ்தானுக்கு எதிராக 1994ம் ஆண்டு 71 ஓட்டங்களை டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்றிருந்தது. இந்தநிலையில் இன்றைய தினம் 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, தங்களுடைய டெஸ்ட் வரலாற்றில் குறைந்த ஓட்டங்களை பதிவுசெய்துள்ளது.
அதுமாத்திரமின்றி டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் பெறப்பட்ட குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியதுடன், கடந்த 100 வருடங்களில் விளையாடப்பட்ட குறுகிய டெஸ்ட் இன்னிங்ஸாகவும் (83 பந்துகள்) பதிவாகியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களையும், லஹிரு குமார ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களை பெற்றார். இவர்கள் இருவர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை அடைந்தனர். இதில் குசல் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்திருந்தனர்.
>>டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்த பும்ரா
தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் பிரகாசிப்பில் அதிசிறந்த பந்துவீச்சை மார்கோ ஜென்சன் பதிவுசெய்திருந்தார். இவர் 6.5 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி நிதானமான ஆரம்பத்தை பெற்று இரண்டாவது நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பாக எய்டன் மர்க்ரம் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 17 ஓட்டங்களையும், தெம்பா பௌவுமா 24 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் முதல் விக்கெட்டை வீழ்த்திய பிரபாத் ஜயசூரிய, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக (17 இன்னிங்ஸ்) 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஜோர்ஜ் லொஹ்மன் மற்றும் பிரான்சிஸ் பேர்ன்ஸ் ஆகியோருடன் பகிர்ந்துக்கொண்டார்.
அதேநேரம் போட்டியின் பந்துவீச்சை பொருத்தவரை அதிகமாக பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததுடன், தென்னாபிரிக்கா அணி 281 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Aiden Markram | c Angelo Mathews b Asitha Fernando | 9 | 11 | 2 | 0 | 81.82 |
Tony de Zorzi | c Kusal Mendis b Vishwa Fernando | 4 | 9 | 1 | 0 | 44.44 |
Tristan Stubbs | c Dimuth Karunaratne b Lahiru Kumara | 16 | 38 | 3 | 0 | 42.11 |
Temba Bavuma | c Lahiru Kumara b Asitha Fernando | 70 | 117 | 9 | 1 | 59.83 |
David Bedingham | b Lahiru Kumara | 4 | 6 | 1 | 0 | 66.67 |
Kyle Verreynne | lbw b Lahiru Kumara | 9 | 22 | 2 | 0 | 40.91 |
Wiaan Mulder | not out | 9 | 12 | 0 | 1 | 75.00 |
Marco Jansen | lbw b Prabath Jayasuriya | 13 | 21 | 2 | 0 | 61.90 |
Gerald Coetzee | c Kusal Mendis b Prabath Jayasuriya | 1 | 8 | 0 | 0 | 12.50 |
Keshav Maharaj | c Dhananjaya de Silva b Vishwa Fernando | 24 | 35 | 3 | 1 | 68.57 |
Kagiso Rabada | c Dinesh Chandimal b Asitha Fernando | 15 | 23 | 2 | 0 | 65.22 |
Extras | 17 (b 2 , lb 5 , nb 4, w 6, pen 0) |
Total | 191/10 (49.4 Overs, RR: 3.85) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 14.4 | 3 | 44 | 3 | 3.06 | |
Vishwa Fernando | 15 | 2 | 35 | 2 | 2.33 | |
Angelo Mathews | 2 | 2 | 0 | 0 | 0.00 | |
Lahiru Kumara | 12 | 1 | 70 | 3 | 5.83 | |
Prabath Jayasuriya | 5 | 1 | 24 | 2 | 4.80 | |
Dhananjaya de Silva | 1 | 0 | 11 | 0 | 11.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Tristan Stubbs b Marco Jansen | 3 | 12 | 0 | 0 | 25.00 |
Dimuth Karunaratne | c David Bedingham b Kagiso Rabada | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Dinesh Chandimal | b Marco Jansen | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Angelo Mathews | c David Bedingham b Marco Jansen | 1 | 14 | 0 | 0 | 7.14 |
Kamindu Mendis | c David Bedingham b Gerald Coetzee | 13 | 20 | 3 | 0 | 65.00 |
Dhananjaya de Silva | b Marco Jansen | 7 | 12 | 1 | 0 | 58.33 |
Kusal Mendis | lbw b Gerald Coetzee | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Prabath Jayasuriya | c Tristan Stubbs b Marco Jansen | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Vishwa Fernando | b Marco Jansen | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Lahiru Kumara | not out | 10 | 5 | 2 | 0 | 200.00 |
Asitha Fernando | c & b Marco Jansen | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 6 (b 0 , lb 1 , nb 4, w 1, pen 0) |
Total | 42/10 (13.5 Overs, RR: 3.04) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kagiso Rabada | 4 | 1 | 10 | 1 | 2.50 | |
Marco Jansen | 6.5 | 1 | 13 | 7 | 2.00 | |
Gerald Coetzee | 3 | 0 | 18 | 2 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tony de Zorzi | c Asitha Fernando b Prabath Jayasuriya | 17 | 32 | 2 | 0 | 53.12 |
Aiden Markram | b Vishwa Fernando | 47 | 81 | 4 | 1 | 58.02 |
Wiaan Mulder | lbw b Prabath Jayasuriya | 15 | 31 | 1 | 0 | 48.39 |
Tristan Stubbs | b Vishwa Fernando | 122 | 221 | 9 | 2 | 55.20 |
Temba Bavuma | lbw b Asitha Fernando | 113 | 228 | 9 | 0 | 49.56 |
David Bedingham | not out | 21 | 11 | 2 | 1 | 190.91 |
Extras | 31 (b 6 , lb 24 , nb 0, w 1, pen 0) |
Total | 366/5 (100.4 Overs, RR: 3.64) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 17.4 | 2 | 54 | 1 | 3.10 | |
Vishwa Fernando | 18 | 2 | 64 | 2 | 3.56 | |
Lahiru Kumara | 18 | 5 | 43 | 0 | 2.39 | |
Prabath Jayasuriya | 40 | 2 | 132 | 2 | 3.30 | |
Dhananjaya de Silva | 6 | 0 | 31 | 0 | 5.17 | |
Kamindu Mendis | 1 | 0 | 12 | 0 | 12.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | lbw b Gerald Coetzee | 23 | 31 | 4 | 0 | 74.19 |
Dimuth Karunaratne | c Tristan Stubbs b Kagiso Rabada | 4 | 18 | 1 | 0 | 22.22 |
Dinesh Chandimal | c & b Gerald Coetzee | 83 | 174 | 12 | 0 | 47.70 |
Angelo Mathews | lbw b Marco Jansen | 25 | 42 | 2 | 0 | 59.52 |
Kamindu Mendis | c Kyle Verreynne b Marco Jansen | 10 | 28 | 0 | 1 | 35.71 |
Prabath Jayasuriya | c Tony de Zorzi b Kagiso Rabada | 1 | 12 | 0 | 0 | 8.33 |
Dhananjaya de Silva | c Tristan Stubbs b Keshav Maharaj | 59 | 81 | 9 | 1 | 72.84 |
Kusal Mendis | c Kyle Verreynne b Marco Jansen | 48 | 77 | 9 | 0 | 62.34 |
Vishwa Fernando | c Aiden Markram b Keshav Maharaj | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Lahiru Kumara | not out | 5 | 15 | 1 | 0 | 33.33 |
Asitha Fernando | b Marco Jansen | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Extras | 23 (b 4 , lb 6 , nb 13, w 0, pen 0) |
Total | 282/10 (79.4 Overs, RR: 3.54) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kagiso Rabada | 21 | 3 | 65 | 2 | 3.10 | |
Marco Jansen | 21.4 | 5 | 73 | 4 | 3.41 | |
Gerald Coetzee | 13 | 0 | 67 | 2 | 5.15 | |
Keshav Maharaj | 24 | 5 | 67 | 2 | 2.79 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<