Home Tamil ஒருநாள் தொடரினை கைப்பற்றிய பாகிஸ்தான்

ஒருநாள் தொடரினை கைப்பற்றிய பாகிஸ்தான்

Sri Lanka tour of Pakistan 2025

31
Babar Azam masterclass leads Pakistan

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதோடு 2-0 என ஒருநாள் தொடரினையும் ஒரு போட்டி மீதமிருக்க வென்றுள்ளது. 

>> கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக டிம் சௌத்தி நியமனம்!

முன்னதாக ராவல்பிண்டியில் ஆரம்பித்த இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் இலங்கையை துடுப்பாடப் பணித்தது. சஹின் அப்ரிடிக்கு உடல்நிலை சரியின்மை காரணமாக ஓய்வு வழங்கபட இந்தப் போட்டியில் சல்மான் அகா பாகிஸ்தானின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.    

இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணிஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஜனித் லியனகே மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினை வழங்கி பங்களிப்புச் செய்தனர். அத்துடன் பின்வரிசையில் வந்த வனிந்து ஹஸரங்கவும் அதிரடி கலந்த நிதானத்துடன் ஆடினார்.  

இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை துடுப்பாட்டத்தில் ஜனித் லியனகே தன்னுடைய 7ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 63 பந்துகளில் 2 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 54 ஓட்டங்கள் எடுத்தார். கமிந்து மெண்டிஸ் 38 பந்துகளில் 44 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 42 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் வனிந்து ஹசரங்க 26 பந்துகளில் 37* ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். 

>> ஆஷஷ் முதல் டெஸ்டிலிருந்து வெளியேறும் ஆஸி. பந்துவீச்சாளர்

பாகிஸ்தான் பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் அப்றார் அஹமட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் தலா  3 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.  

பின்னர் 50 ஓவர்களில் 289 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்குஆரம்ப வீரர்களான சயீம் அயூப் (33) மற்றும் பக்கர் சமான் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். 

அதனையடுத்து, இலங்கை அணியின் சில பிடியெடுப்பு தவறுகளை மேற்கொண்டிருக்க அதனை சாதகமாக உபயோகம் செய்த பாகிஸ்தான் அணிக்காக பின்னர் களமிறங்கிய பாபர் அசாம்பக்கர் சமானுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினார். அத்துடன் மொஹமட் ரிஸ்வானும் நான்காம் இலக்க வீரராக வந்து அரைச்சதம் விளாசினார். அதேநேரம் பாபர் அசாம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் பெற்றார். 

இதனால் பாகிஸ்தான் போட்டியின் வெற்றி இலக்கினை 48.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 289 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.  

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் பாபர் அசாம் 119 பந்துகளில் பெபண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அதேநேரம் பக்கர் சமான் 93 பந்துகளில் 78 ஓட்டங்கள் எடுக்க, மொஹமட் ரிஸ்வான் 54 பந்துகளில் 51* ஓட்டங்கள் எடுத்திருந்தார்.  

போட்டியின் ஆட்டநாயகனாக பாபர் அசாம் தெரிவானார்.  

போட்டியின் சுருக்கம் 

Result
Pakistan
289/2 (48.2)
Sri Lanka
288/8 (50)
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka run out (Mohammad Rizwan) 24 31 4 0 77.42
Kamil Mishara  st Mohammad Rizwan b Abrar Ahmed 27 39 2 0 69.23
Kusal Mendis c Mohammad Nawaz b Abrar Ahmed 20 28 2 0 71.43
Sadeera Samarawickrama b Haris Rauf 42 52 3 1 80.77
Charith Asalanka lbw b Abrar Ahmed 6 7 1 0 85.71
Janith Liyanage  c Mohammad Nawaz b Mohammad Wasim Jnr 54 63 2 1 85.71
Kamindu Mendis c Saim Ayub b Haris Rauf 44 38 4 2 115.79
Wanindu Hasaranga not out 37 26 3 0 142.31
Dushmantha Chameera lbw b Haris Rauf 0 1 0 0 0.00
Pramod Madushan not out 11 15 2 0 73.33
Extras 23 (b 0 , lb 9 , nb 0, w 14, pen 0)
Total 288/8 (50 Overs, RR: 5.76)
Bowling O M R W Econ
Naseem Shah 10 1 63 0 6.30
Haris Rauf 10 0 66 3 6.60
Mohammad Wasim Jnr 10 0 50 1 5.00
Abrar Ahmed 10 0 41 3 4.10
Mohammad Nawaz 7 0 44 0 6.29
Saim Ayub 3 0 15 0 5.00

Batsmen R B 4s 6s SR
Fakhar Zaman c Janith Liyanage  b Dushmantha Chameera 78 93 8 1 83.87
Fakhar Zaman c Charith Asalanka b Dushmantha Chameera 33 25 5 1 132.00
Babar Azam not out 102 119 8 0 85.71
Mohammad Rizwan not out 51 54 5 1 94.44
Extras 25 (b 1 , lb 5 , nb 1, w 18, pen 0)
Total 289/2 (48.2 Overs, RR: 5.98)
Bowling O M R W Econ
Asitha Fernando 8.2 0 66 0 8.05
Pramod Madushan 8 0 62 0 7.75
Dushmantha Chameera 10 0 58 2 5.80
Charith Asalanka 6 0 33 0 5.50
Wanindu Hasaranga 10 0 35 0 3.50
Janith Liyanage  4 0 13 0 3.25
Kamindu Mendis 2 0 16 0 8.00

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<